-
விருதுநகர்'கை தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 'என்ற பழமொழிக் கேற்ப பெண் தொழில் முனைவராக திகழ்கிறார் விருதுநகர் பிரபாவதி. கணவர் மாரிக்கனியுடன் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் மாலைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி இன்று தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி தொழிலில் வெற்றிக்களை குவித்து வருகிறார். தொழிலை மட்டும் கவனித்து சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் தனக்கு தெரிந்த தொழிற்கலையை பிறருக்கு சொல்லிக்கொடுக்கிறார். தினமும், காலை, மாலையில் தனியார் பயிற்சி நிறுவனம், கல்லுாரிகளுக்கு சென்று பயிற்சி அளித்து சுய தொழில் முனையும் பெண்களை ஊக்கப்ப டுத்துகிறார்.அவர் கூறுகையில், '' செயற்கை ரோஜா, மல்லி, சாமந்தி, சூரியகாந்தி, செம்பருத்தி, பிச்சி, முல்லை மலர்களை கொண்டு பிளாஸ்டிக் பூமாலை , தோரணங்கள் செய்கிறாம். திருச்செந்துார், மதுரை உள்ளிட்ட இடங்களிலில் இருந்து ஆர்டர் கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். முன்பெல்லாம் ஒரு சில மாடல்களில் மட்டும் பிளாஸ்டிக் மாலைகள் வந்தன. ஆனால் இன்று கலர், கலராக புதிய வடிவில் வருகிறது. எந்த டிசைன்களில் வேண்டுமானாலும் உருவாக்கவும் முடியும். மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் தொழில் நன்றாக செல்கிறது. புதிய சிந்தனை, முறையான பயிற்சி, முயற்சி இருந்தால் தொழிலில் சாதிக்கலாம்,'' என்றார்.-------- ரசித்து உருவாக்குகிறோம்ஒரு மாதம் மட்டுமே பயிற்சிக்கு வந்தேன். முறையாக கற்றுக் கொண்டதால் குழந்தைகள் விரும்பும் வடிவில் பொம்மைகள் செய்கிறேன். மகிழ்ச்சியான தருணங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கி தருகின்றனர். அந்த மிகழ்ச்சி இரட்டிபாக மாறும் வகையில் பொம்மைகள் இருக்க வேண்டும். இதை உணர்ந்து, ரசித்து பொம்மைகளை உருவாக்குகிறோம். சுவாமிபடங்கள், வீட்டு வாசலில் தோரணமாக மணம் வீசாமல் வாடாமல் நீடிக்கிறது.- தேவிபிரியா,குடும்ப தலைவி ,விருதுநகர்.
-
இந்த நூல் காலை மாலை சிந்தனைகள், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலை மாலை சிந்தனைகள், கவிஞர் புவியரசு, Kavignar Puviarasu, Kavithaigal, கவிதைகள் , Kavignar Puviarasu Kavithaigal,கவிஞர் புவியரசு கவிதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Puviarasu books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.
|