நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. தாமோதரன்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :283
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788185602615
Add to Cartதொல்காப்பியத்தைத்
துவக்கமாகக் கொண்ட தமிழ் இலக்கண வரலாற்றின் நெடிய மரபில் இடைக்கால
இலக்கணங்களில் பவணந்தி முனிவர் இயற்றி வழங்கிய நன்னூலே தலைசிறந்தது. இந்த
நூலுக்குப் பத்து உரைகள் எழுந்தன. அவற்றுள் ஒன்று ‘நன்னூல் மூலமும்
கூழங்கைத் தம்பிரான் உரையும்’. இந்தச் சுவடி லண்டனில் உள்ள பிரிட்டிஷ்
நூலகத்தின் கீழ்த்திசைப் பகுதியில் மட்டுமே இருக்கிறது.
தன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் முறையில், தெளிவாகப் புரியும் வகையில் கூழங்கைத் தம்பிரான் (1699?-1795) பதவுரையை அமைத்துள்ளார். இந்த உரை முழுவதையும் அ. தாமோதரன், கைப்பட எழுதி ஜெர்மன் ஹைடெல் பெர்க் பல்கலைக்கழகத் தெற்காசிய நிறுவனம் 1980இல் முதன்முதல் வெளியிட்டது. பிற உரையாசிரியர்கள் நன்னூலுக்கு எழுதிய கருத்துகளை ஒப்புநோக்கும் வகையில் அடிக்குறிப்புகளை உள்ளடக்கி இந்தப் புதிய பதிப்பு தற்போது வெளிவருகிறது.