book

தித்திக்கும் திருநெல்வேலி சமையல்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா இராமநாதன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

காரடை
தேவையான பொருட்கள்:
அரிசி-- 1கப்
வெல்லம்- ஒன்றே கால் கப்
தண்ணீர்-ஒன்றே கால் கப்
காராமணி-1டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1கப்
ஏலம்- 6 நெய்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
காராமணியை வாணலியில் போட்டு வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி சுத்தப்படுத்தி ஊறவைக்கவும். ஊறியபின்னர் தண்ணீரை வடித்து உலரவிட்டு இடிக்கவும். இடித்த மாவை சலித்து வறுத்துக் கொள்ளவும். நன்கு சிவக்கும்வரை வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லத்தைப் பொடித்துப்போட்டு வெல்லம் கரைந்தவுடன் அதில் வறுத்த மாவு, காராமணி, தேங்காய் துருவல், ஏலப்பொடி போட்டு கலக்கவும்.
கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கடைசியாக நெய்விட்டு இறக்கவும். பாதி வெந்திருந்தால் போதுமானது. இறக்கிய மாவை வடைபோல் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.