book

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாத்துரை
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :14
Published on :2018
ISBN :9788183680097
Out of Stock
Add to Alert List

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆனால், முன் நாட்களில் தமிழ் நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன. மிகப் பழைய இலக்கணங்களிலும், நூல்களிலும், உரைகளிலும் குமரிமுனைக்குத் தெற்கே நெடுந் தொலை நிலமாயிருந்தது என்றும், அந் நிலப்பகுதி பல்லூழிக் காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்டதென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.