book

குமாரசுவாமியம் மூலமும் உரையும்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.வ. சுப்பிரமணியம்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :296
பதிப்பு :2
Published on :2003
Out of Stock
Add to Alert List

குமாரசுவாமியம் என்ற நூலில் நான்கு வகையான வேதை பற்றிய அற்புத ஜோதிட தகவல் உள்ளது , அவை பொது வேதை, வாம வேதை, சமூக வேதை, தெட்சண வேதை ஆகும், பொது வேதை என்பது திருமண பொருத்தத்தின் போது பார்த்திருப்போமே அது, இவை ஒன்றுக்கொன்று வேதை ஆகும். அடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் நான்காவது நட்சத்திரம் வாம வேதை ஆகும் , வஞ்சக சூழ்ச்சியால் ஏமாற்றம் அடைவதை குறிப்பது, அடுத்து 11வது நட்சத்திரம் "சமூக வேதை". சமுதாயத்தால் அவமானப்படுதல்,அடுத்து 18வது நட்சத்திர "தெட்சன வேதை" இந்த வேதை பணத்தால் பகை, துன்பம் ஏற்படும் நிலையை உணர்த்தும் ,உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து வாம, சமூக, தெட்சன வேதையில் ஒரு கிரகம் இருந்து தசை நடத்தினால் சுப ஆதிபத்திய பலன் கெட்டு வேதை பலனே நடக்கும் . இந்த நட்சத்திரத்தில் வாழ்க்கை துனை, தாய், தந்தை , குடும்ப உறுப்பினர் இருந்தால் அவர்கள் மூலம் அந்த வேதை பலன், அந்த நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் தசையில் நடக்கும் ,