
பிசி
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ஏகரசி தினேஷ்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2024
Add to Cart'' பிசி '' வாசிப்பனுபவத்தை இனிய நிலையிலிருந்து ஆழ்ந்த தேடலாக கனம் தாங்கி நிறுத்துவதோடு சுவாரஸ்ய கிளர்ச்சியை அறிவியல் புதிர்களாக்கி, தூக்கம் கலைக்கும் தீவிர கதைக்களம்.
புதிர், மர்மம், அறிவியல் கதையின் நடுநாயகமாக இருந்தாலும் சற்றும் குறைவில்லா மொழியியல் செறிவும் நேர்த்தியும் வியாபித்திருக்கும் பா.ஏகரசி தினேஷின் இக்கதை நிறைவானதோர் அனுபவம்.
கதைகளிலேயே அதிக ஈர்ப்பு இருப்பது புதிர் கதைகளுக்கு தான். அவ்வாறு பல புதிர்களை அவிழ்க்க முடியாத முடிச்சுகளை கொண்டது தான் இந்த ''பிசி''
சாதாரண கடத்தல் கதையாகத் தொடங்கி, புனைவு வெளியில் சுவாரஸ்யத்திற்குப் பெயர் போன அறிவியல் சார்ந்த கதைக் களத்தில் நவீன மயமாக்கலின் தேவைக்கேற்ப மறுதலிக்க முடியா சுவாரஸ்யத்தை வரலாற்றிலும் அறிவியலிலும் பிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிர் (பிசி) கதை. பல நூறு வருடங்களுக்கு முன் தோன்றிய அல்லது உருவாக்கப்பட்ட ஆனால் இன்றும் வியப்புக்குரியனவையான பலவற்றை கதையோட்டத்தில் கடத்தி செல்ல முயன்ற நவீன கதைக்களம்.
