
இதயத்தை தேடாதே
₹143+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். ரேணுகா சூரியகுமார்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789349691254
Add to Cartஅன்பு இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் கட்டி வைக்கும் மர்மக்கயிறு . ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலும் அப்படிப்பட்ட ஒரு மர்மக்கயிற்றால் பிணைக்கப்பட்டது தான். எத்தனையோ பேர் காதலைப் பற்றி, எத்தனையோ பல பல காவியங்களைப் படைத்துவிட்ட போதிலும், இன்னும் இன்னும் வளர்ந்து வந்த முடிவில்லாது பயணிக்கின்றன காதலைப் போன்றே காதல் காவியங்களும். இத்தகைய முடிவில்லாப் பயணத்தில் ஒன்றுதான் இதயத்தை தேடாதே.
ஒரு ஆணின் காதலை, அவன் மத்திலிருந்து அழகிய சொற்களாக அள்ளித் தெளித்திருக்கின்ற பல கவிதைகளைக் கொண்டது இந்நூல்.
அவன் அவளும் சந்தித்துக் கொண்ட பல தருணங்கள், பேச மறந்து பார்வையால் பரிமாறிக் கொண்ட அன்புகள், பார்க்காமலே சென்ற போதும் அவளைப் பார்த்து அன்பு கொள்ளும் நெஞ்சம் , நட்பா, காதலா எனும் போராட்டம் இப்படிப்பட்ட பல தருணங்கள் இந்நூலில் கவிதைகளாக்கப் பட்டுள்ளன. இனிய எளிய சொற்களின் மூலம் ஆணின் மனதை அழகுற வெளிப்படுத்தும் இக்கவிதைகளை உருவாக்கியவர் ஆர். ரேணுகா சூரிய குமார்.இவரது இப்படைப்பை எமது பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
காதலும், ஊடலும், காதலியைக் கைபிடித்த மகிழ்வும் என் ஒரு ஆணின் மனதை அழகுற வெளிப்படுத்தும் இக்கவிதைகளை வாங்க அன்பர்கள் படித்து இன்புற்றிட விழைகிறோம்.
