ஆதிக்குடிமக்களும் ஆல்கஹாலும்
₹299+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு தர்மராஜ்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576456
Add to Cartஅவர் பெயர் முல்லைவேந்தன். வயது நாற்பதாகிவிட்டது என்றாலும்
திருமணமாகவில்லை. முல்லையின் தகப்பர் முடிசூடியபெருமாள் அக்காலத்தில்
வாழ்ந்த ஒரு பானமோற்சவர். உற்சாக பானம் அவரைப் பாடையில் தூக்கி செல்லவில்லை
என்றாலும்கூட அவர் பாடையில் போகும் காலம் வரையிலும் தன் மனைவியை விட
அதிகமாக பானத்தை நேசித்து தழுவிக் கொண்ட ஒரு மிகப்பெரிய குடியாண்டவர்.
ஆகையால் முல்லைக்கு பெண் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது.
''தகப்பனைப் போல பிள்ளை, குப்பியைப் போல குவளை''
என்று சொல்லி முல்லைக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை. ‘தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல்!’ என்று பானத்தைத் தழுவத் தொடங்கினார் முல்லை.
ஒரு பெரிய கோடாலியை எடுத்து மரத்தைப் பிளப்பது தொடங்கி, ஒரு சிறு உளியை எடுத்து, மரத்தை பிசிறு தட்டாமல் செதுக்குவது வரை முல்லைக்கு நிகர் ஒரு பயல் கிடையாது. அப்படி ஒரு திண்ணமான ஆள்.
முல்லைக்கு மொழிகளின் மீது அத்தனை பிடிப்பு இல்லாததாலும், பானக் கடையில் அநேகர் சேர்ந்து மொழிகளற்ற சப்தங்களை உருவாக்கியதாலும் கூட்டமான இடங்களைத் தவிர்ப்பார். பெரும்பாலும் பானக்கடைகள் ஆர்ப்பரிக்கும் சத்தங்களை உருவாக்கும் என்பதால் தன் எடுபிடி கைலாசத்தை அனுப்பி பானக்குப்பிகளை ஊர்முகப்பிலுள்ள கிணற்றங்கரைக்கு வரவழைப்பார்.
கைலாசம் ஒரு சுறுசுறுப்பான சுள்ளான். தன் குருவின் சொல்லைத் தட்டாதவன். அவருக்கு ஒரு முழு குப்பி சாராயமும், வாத்துக் கறியும் வாங்கி விட்டு தனக்கு ஆகாரமும், கொறிப்பதற்கு பட்டாணிக் கடலையும் வாங்கி வருவான்.
குப்பியின் வருகையானது முல்லைக்கு மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கிவிடும். அந்தக் குப்பியை எடுத்து கிணற்றின் கரைதனில் வைத்து பாடத்துவங்கி விடுவார்.
“உனைக்கண்ண்டு.. மயங்ங்ங்காத பேர்களுண்டோ..!
உனைக்கண்ண்ண்டு.. மயங்ங்ங்கா..த.. பேர்களுண்..டோ..!
உனைக்கண்ண்ண்ண்..டு.. மயங்கா..த.. பேர்களுண்டோ..!
வடி. வழ.. கிலூ..ம்ம்ம்ம் குண..மதிலூ நிகரிலுன்னைக்
கண்ண்டும்மயங்..காத..த பேர்களுண்டோ!”
பாட்டைக் கேட்டு அந்தப் பிரதேசத்தில் உலவும் பூச்சிகள் அத்தனையும் பறந்து ஓடி விடும்.
குப்பியில் உள்ள ‘உற்சாக ஜலம்’ முழுவதும் தீரும்போது வாத்துக்கறியின் முக்கால் பங்கை கைலாசமும், கால் பங்கை வயலிலுள்ள எலிகளும் தின்றிருப்பார்கள். ‘முல்லைக்கு பட்டாணிக்கடலைகளாவது கிடைத்தால் உண்டு, இல்லையென்றால் இல்லை, வெறும் உற்சாக நீராகாரம் மட்டுமே போதுமானது’ என்று முல்லை சமாதானமாகி விடுவார். இது வழக்கமாக நிகழும் காரியங்கள்தான்.
குடியின் முடிவில் முல்லை தன் முன்னோரை தூய தமிழில் வாழ்த்துவார். தான் திருமணமாகாமல் மகிழ்ந்திருப்பதற்கு அவர்களுடைய தூய நடத்தைகள்தான் காரணம் என்று எண்ணி கண்கலங்குவார். கைலாசம் ஆறுதல் கூறிக் கொண்டே பட்டாணியையும், வாத்துக் கறியையும் வாரி வாய்க்குள் இறைப்பான். செகண்ட் ஷோ முடிந்து செல்பவர்கள் இவர்களைக் கடந்துதான் ஊருக்குள் நுழைய வேண்டும்.
ஊர் எல்லையின் நள்ளிரவு நேரத்து பாதசாரிகளும், உடுக்கையோடு வரும் ராப்பாடியும் இவர்கள் இருவரது இருப்பின் தைரியத்தில்தான் ஊருக்குள் நுழைவார்கள் அல்லது வெளியேறுவார்கள். ஆனால் ராப்பாடியோடுகூடவே துணைக்கு வரும் வாதைகள்தான் தயங்கி நிற்கும். முல்லையின் பான மிகுதி பாடல்கள்தான் வாதைகளின் அச்சத்துக்குக் காரணம். ஒருகட்டத்தில் தன் பெற்றோரை பாடுபொருளாக்குவார் முல்லை. வானத்தைப் பார்த்தபடியே கதறுவார்.
“எலே எச்சிக்கல தா..ளி! நீ குதிச்ச குதிக்கும், குடிச்ச குடிக்கும் இன்னைக்கி நா கெடந்து நாக்க நாக்க வாங்கிட்டு கெடக்கேன்! பேரு கொள்ளாம்! முடிசூடியபெருமாளு! காவக்கார கொன்ன பயல்! தொட்டிக் கூய்மோன! ஒன்னாலத்தானல நா இங்க ஒத்தையில கெடந்து சாவுகேன்! இன்னக்கி வரைக்கும் ஒரு முக்கோணத்தையும், வட்டத்தையும் கண்டது கெடயாது! கவுட்டைக்கெடையில கைய வச்சிக்கிட்டுதானே கெடக்க வேண்டியிருக்கு! எங்கம்மய நீ படுத்துன பாட்டுக்கு ஒத்தப் புள்ளையா என்னைய பெத்துப் போட்டுகிட்டு ஓடிப்போயிட்டா! பொறந்ததுலேர்ந்து பாலக்கண்டது கெடயாது! பூரா தண்ணிதாம்! இங்க பாத்தியா கூய்வுள்ளா!”
(கையிலிருந்த குப்பியை வானத்துக்கு நேராக ஏறெடுத்தார், ‘அவரது தகப்பனார் வானத்திலிருந்து இந்தக் காட்சிகளையும், வசவுகளையும் காண்பார்’ என்று முல்லை நினைத்திருக்கக்கூடும்)
முடிவில் முல்லையின் கண்களிலிருந்து அருவி பெருகும். ‘தன்னுடைய தனிமையைப் போக்க வந்த தேவதூதன் இவன்தான்’ என்று கைலாசத்தைக் கட்டிப் பிடித்தவாறே அழுவார். பின்னிரவின் சுவர்க்கோழிகளை உறங்க வைத்த பின்தான் இருவரும் தூங்கப்போவார்கள்.