book

நரேந்திரன் ப்ளஸ் நரேந்திரன் - சாவதற்கு ஒரு சட்டம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

நரேந்திரன் ப்ளஸ் நரேந்திரன் நரேந்திரனும் நரேனும் இணைந்து கலக்கும் அதிரடி டிடெக்டிவ் நாவல் மேலிருந்து கீழ் என்ற ஒழுங்குடன் நரேந்திரன் ஒவ்வொரு மாடியாக ஆராய்ந்தான். நான்காவது மாடிக்கு வந்தவுடன் அவன் கண்கள் விரிந்தன. பைனாகுலர்ஸின் ஃபோகஸ் பாயிண்ட்டை இன்னும் தெளிவாக்கி உற்றுப் பார்த்தான். எதிர்க் கட்டிடத்தின் நான்காவது மாடியில் கண்ணாடிச் சதுரங்கள் தெரிய, கட்டிடத்தின் இரு விளிம்புகளில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் லேசாக விலகி இரண்டு கறுப்புக் குழல்கள் நீண்டிருந்தன. அவை துப்பாக்கி முனைகளாய் இருக்கக் கூடும் என்று தோன்றியது அவனுக்கு. அந்தத் துப்பாக்கி முனைகள் இரண்டு தனக்குக் கீழே இருக்கும் நிலத்தை வேவு பார்ப்பது போல் மெல்ல நகர்ந்தன. ஒரு ரேஞ்ஜ் வரை அவை நகர்ந்து மறுபடி தங்களுடைய பயணத்தை ரிவர்ஸ் செய்தன. ******* சாவதற்கு ஒரு சட்டம் வித்தியாசமான பின்னணியுடன் ஓர் உறைய வைக்கும் த்ரில்லர். "கற்பனையில்லை எழுத்தாளரே....நிஜத்தில் நடப்பதைப் பார்த்து எழுதப் போகிறீர்கள்...." "நீ சொல்வது எனக்குப் புரியவில்லை செல் லதுரை. "நான் இரண்டு கொலைகள் செய்தவன். இன்னும் நான் மாட்டவில்லை. கொலைகள் செய்தது யார் என்று போலீஸிற்கு எந்தத் தடயமும் கிடைக்கவில் “அ.... அப்படியா.?" ''ஆமாம். இனி நான் செய்யப் போகிற கொலைக ளுக்கும் உங்களை சாட்சி வைத்துக்கொள்ளப் போகிறேன். போலீஸில் மாட்டிக் கொள்ளாமல், நான் எப்படிக் கொலைகள் செய்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.... எழுதப் போகிறீர்கள்....' "ஐயையோ.... வேண்டாம் செல்லதுரை....."