book

உலகை வென்றவன் - ரோஜாப் படுக்கை (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

ரோஜாப் படுக்கை செல்வா துப்பறியும் கலகல த்ரில்லர் மூன்றாவது முறை காரின் கதவில் தோட்டா உரசியது. காரின் இத்தனை வேகத்துக்கும் ஈடுகொடுத்து ஒருவனால் சுட முடிகிறது என்றால் அவன் நிச்சயம் பக்கத்தில் ஏதோ ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சி யில் உட்கார்ந்திருக்க வேண்டும். கையில் ஒரு சக்தி வாய்ந்த டெலஸ்கோபிக் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். காரை நிறுத்திவிட்டு இறங்கி அவனை வேட்டையாட நான் முனைந்தால் அதைவிட சுலபமான குறி அவ னுக்கு இருக்காது. என் துப்பாக்கியால் காருக்கு வெளியே ஷூட் செய்வது என்பது ஏதோ சினிமா ஷூட் டிங்குக்கு செய்யலாமே தவிர, இப்போது செய்தால் வேஸ்ட். *********** உலகை வென்றவன் அரசியலும் த்ரில்லும் இணைந்த மர்மக் கதை. 'உன் பிரதமரின் உயிரை முடிந்தால் காப்பாற்றிக் கொள். நான் அந்த தேசத்துரோகியைக் கொல்லப் போகிறேன். நீ எவ்வளவு பாதுகாப்பு அளித்தாலும் சரி, உன் பிரதமருக்கு நான்தான் எமன்.. ஹாவ் எ நைஸ் GL..' சூரியகுமாரின் காதில் ஒலித்த குரல் அவன் மனதைவிட்டு அகல மறுத்தது. மணியோசை ஓய்ந்த பின்பும் அதன் ரீங்காரம் தொடர்வது போல், திரும்பத் திரும்ப அதே வாக்கியம் மனதில் ஒலித்தது . சுத்தமான ஹிந்தி வாக்கியங்கள். அதனால் பேசியவன் எந்த பிரதேசத்துக்காரன் என்று தெரிந்து கொள்வது சிரமம். ஆண். அதில் சந்தேகமில்லை. வயதை நிர்ணயிக்க முடியவில்லை.