
நாலந்தா
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :B.R. மகாதேவன், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789390958962
Out of StockAdd to Alert List
புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது.
வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய
அனைத்துக்குமான நிதி வசதி முழுவதும் தனியாக அதன் வசம் இருந்தது. இது
முழுக்கவும் அயல் நாட்டு அரசு, நாலந்தாவில் தங்கிக் கல்வி பெற வரும் தமது
நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் செய்துகொடுக்கப்பட்டிருக்கலாம். ஸ்வர்ண
த்வீப வளாகம் என்று இது அழைக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இந்த
மடாலய வளாகங்கள் எல்லாமே தனித்தனி நிர்வாக அமைப்புகளாக ஒவ்வொன்றும்
தனித்தனி அம்சங்களுடன் இருந்து வந்தது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட
முடியாது. இருந்தும் இந்த மடாயலங்களில் வழிபாட்டு மையங்கள் காலப்போக்கில்
பெருகி வந்திருப்பதைப் பார்க்கும்போது எல்லா காலகட்டங்களில்
இல்லையென்றாலும் பல்வேறு தலைமுறைகளில் தனித்தனியான நிர்வாக அமைப்புகள்
உருவாகியிருக்கலாம் என்று முடிவுக்கு நாம் வரமுடியும்.
