book

இனிப்பு மாயாவி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உமையவன்
பதிப்பகம் :நிவேதிதா புத்தக பூங்கா
Publisher :Nivethitha Puthaga Poonga
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391614935
Out of Stock
Add to Alert List

வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்! இதனை நாடு என்று சொல்வதை விட குட்டி தீவு என்று சொல்லலாம். ஆம், வனப்பூர் நான்கு பகுதிகளிலும் கடல்களால் சூழப்பட்ட அழகிய குட்டித் தீவு. இதனால் மற்ற நாடுகளுக்கும் வனப்பூருக்கும் இடையே பெரிய தொடர்பே இருக்காது. கப்பல் போக்குவரத்து குறைவு என்பதால் வனப்பூர் மக்கள் வேறு நாடுகளுக்குச் செல்வதும் இல்லை, மற்றவர்களும் இங்கு வருவதும் இல்லை. சிறிய தீவாக இருந்தாலும் வனப்பூரில் இல்லாத வளங்களே கிடையாது. தங்களுக்குத் தேவையான உணவு உட்பட அனைத்து பொருட்களையும் அங்குள்ள மக்களே தயார் செய்து கொள்கிறார்கள்.