தமிழகக் காதல் கதைகள்
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முருகேச பாண்டியன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285070
Add to Cartகாதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது
நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம்,
ஏக்கம், விழைவு, தவிப்பு. காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம்,
பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும்
அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல்
எனும் மர்ம ஆறு சுழித்தோடிக்கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள்
புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன்
இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல், ஒருவகையில்
சித்தப்பிரமைதான். அது, இன்றளவும் தொடர்கிறது. கடந்த காலத்தில் சமூக
வரலாற்றைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும், எளிய
மனங்களை மனப்பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசுகளை வீழ்த்திடவும்.
மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் ஆற்றல்மிக்க காதல், வற்றாத
ஆறுபோல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது.
காதல் பற்றிய புரிதல், தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலே
தொடங்கிவிட்டது. சமூக இருப்பினைத் திணைசார் வாழ்க்கையாக அவதானித்த நிலையில்
அகத்திணை மரபு, காதலை மையமிட்டு விரிந்துள்ளது. பிரிவு, காத்திருத்தல்
என்ற இருவேறு ஆதார உணர்ச்சிகளின் வழியாகப் புனையப்படும் காதல், ஆண் பெண்
உறவின் அடிப்படையாக விளங்குகிறது.