book

பெருமகிழ்வின் பேரவை

₹550
எழுத்தாளர் :ஜி. குப்புசாமி, அருந்ததி ராய்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :445
பதிப்பு :1
Published on :2023
ISBN :97889390224906
Add to Cart

‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற இலக்கிய அற்புதத்தின் தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல் மாயம் ‘பெருமகிழ்வின் பேரவை’.
சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில் புனைவாகிறது. மிக அண்மைக் கால நடப்புகளையும் மனிதர்களையும் வரலாற்றால் ஒப்பனை பெறுவதற்கு முன்பே உண்மையின் ஒளியில் சுட்டவும் காட்டவும் அருந்ததி ராய்க்கு சாத்தியமாகிறது. நாளை எழுதப்படவிருக்கும் கச்சிதமான வரலாற்றின் இன்றே எழுதப்பட்ட ஈரமான பதிவு இந்நாவல்.
நிகழ்கால இந்திய வரலாற்றில் நாம் அறிந்த மனிதர்களின் அறியப்படாத தோற்றங்கள், நாம் அறிந்த சம்பவங்களின் மறைக்கப்பட்ட உண்மைகள், நாம் புறக்கணித்த எளியவர்களின் வெளிப்படாத மகத்துவம் - இவற்றின் ஆகத் தொகை ‘பெருமகிழ்வின் பேரவை’.
எல்லோராகவும் மாறுவதன் ஊடே சொல்லப்படுவதல்ல; எல்லாமாக மாறுவதன் ஊடே சொல்லப்படுவதே இந்நாவலின் கதை.