book

ஆடல் எங்கேயோ அங்கே...

₹365+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நித்தியானந்தன்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :221
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195458486
Add to Cart

அச்சிட்ட தாளின் மைகூட உலராத அவசர நிர்ப்பந்தத்தில் அச்சகத்திலிருந்து எடுத்திருந்த தனது 'புதியதோர் உலகம்' என்ற நாவலோடு சென்னை அடையாறில் ஒரு நள்ளிரவில் என்னைச் சந்தித்தார் நோபர்ட். கோவிந்தன் அவரது புனைபெயர். பிரான்சிஸ் சேவியர் என்ற பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார்... நோபர்ட் தான் சார்ந்திருந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, ஆபத்தான சூழலில் ரகசியமாக எழுதியும் அச்சிட்டும்  வெளியான நாவல் அது. சென்னையில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த நெருக்கடியான மனோநிலையில் ஒரு கலைஞனின் தகிப்பில் எழுதப்பட்ட நாவல் அது.மரணம் தன்னை நிழல்போல்த தொடரும் துர்ச்சூழலில் அவர் பிரசவித்த நாவல்.