
சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :304
பதிப்பு :4
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of StockAdd to Alert List
இந்திய அரசின் சாகித்ய அகாதமிப் பரிசு பெற்ற நூல்.
ஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள்
முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர்
கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது.
அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப்
பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை. கட்டுரை நூல் ‘சிந்தாநதி’
அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில்
எழுதப்பட்டிருக்கும்.
சலசல
84 கடைசி. ஒருநாள், தினமணி கதிர் காரியாலயத்துக்குச் சென்றிருந்தபோது,
ஆசிரியர், "வாரம் இரண்டு பக்கங்கள் உங்களுக்காக ஒதுக்குகிறேன்,
எழுதுங்களேன்" என்றார்.
நான்: 'எதைப் பற்றி?'
ஆசிரியர்: 'பூமிமேல் எதுபற்றி வேணுமானாலும்; உங்களுக்குத் தோன்றியபடி.'
தாரளமான ஆர்டர்தான்.
நான்: "இப்பத்தான் உங்கள் சிப்பந்தி, கதிருக்கு வந்த கடிதம் ஒன்றைக்
காண்பித்தார். 'லா.ச.ரா. என்னத்தை எழுதுகிறார்? ஒன்றுமே புரியவில்லை.
மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கிறது.' அப்படியுமா என்னை எழுதச்
சொல்கிறீர்கள்?"
ஆசிரியர்: ''பிய்த்துக் கொள்ளட்டுமே! இரண்டு பக்கங்கள்தானே!”
ஒரு சிறுகதை எழுதவே, சாதாரணமாக மூணு மாதங்கள் எடுத்துக்கொள்ளும்
எனக்கு, கதிரின் அச்சு யந்திரங்களுக்கு என் பங்குத் தீனியை வாராவாரம்,
நேரத்தில் போட இயலுமா?
பிடிகொடாமல் என்னத்தையோ முனகி விட்டு நழுவி விட்டேனானாலும் வெட்டென விட்டொழிக்க
முடியவில்லை. 'விண்விண்' பொறுக்காமல், ஒருநாள் எழுந்து உட்கார்ந்து முனைந்து எழுதத் தலைப்பட்டதன் விளைவாய் -
சிந்தா நதி போன வருடம், கதிர் பொங்கல் இதழில் பெருக ஆரம்பித்து, வருடம் முடியப் பரவி -
நதி வற்றவில்லை ஆனால் பத்திரிகைத் தொழிலில் வியாபார ரீதியில்
ஸ்தாபனத்தின் சௌகரியங்கள், சொந்தப் ப்ரச்சனைகள், அவ்வப்போது புதுமை ஏதேனும்
செய்துகொண்டிருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தங்கள் - இவை எழுத்தாளனுக்கு
முற்றிலும் புரியாது; புரிந்தாலும் அவைகளுடன் அவன் சமாதானமாக மாட்டான்.
கிடக்கட்டும்.
சிந்தா நதி என்கிற தலைப்பு, உள்ளத்தில் எவ்வாறு தோற்றம் கண்டது?
வாரா வாரக் கட்டளைக்கு எவ்வாறு என் எழுத்துப் படிந்தது?
நினைவு, எடுக்க எடுக்க அடியே காண முடியா இத்தனை பெரிய பேழையா?
இன்னும் நான் மீளா வியப்புக்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் ஆச்சரியம், வாசகர்கள், ஆரம்பத்திலிருந்தே, இந்தத் தொடருக்குக் காட்டிய அமோகமான ஆதரவுதான்."
"சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர,
என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும்.
வீட்டுக்கும்,
தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல தூரங்களிலிருந்தும்,
என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலைகளில், தங்கள் நெஞ்ச
நெகிழ்ச்சிகளை இதயப்பாளங்களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம்
கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி,
ஆறுதல், தைரியம் பற்றியும்,
மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக்
கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக் கோல் பட்டு
இந்த அலைகள், வாசகனின் தருணத்துக்கேற்றபடி, ஆத்மாவின் திறவு
கோலாகஅமைந்திருக்கையில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம்,
மானுடத்தின்மேல் மரியாதை.
