
5:12 PM
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.கே. குமார்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Add to Cartஎம் .கே . குமாருடைய சிறுதைகளின் சுவாரசியமே சிங்கப்பூர் எனும் பெரு நகரத்தில் எங்கோ ஒளிந்திருக்கும் சற்று வித்தியாசமான மனிதர்களையும் அவர்களுடைய சிக்கல்களையும் கதைக்குள் கொண்டுவரும் லாகவம்தான்.சிங்கப்பூருக்குச் சென்றால் பிழைக்கலாம் எனத் தமிழகத்திலிருந்து நம்பிக்கையுடன் வந்து சேரும் எளிய மனிதர்களின் சிக்கல்கள், உடலை மூலப்பொருளாக உபயோகிக்கும் அலட்சியப்போக்கு நிறைந்த பெண், பழைய பாட்டில்களைச் சேகரிக்கும் பெண், இந்திரா காந்தியுடன் தொடர்பில் இருப்பதாக நம்பும் மனம் பிறழ்ந்த முதியவர், காமத்தின் உச்சத்தில் மனம் பிறழ்ந்து மரணத்தை நோக்கி ஓடும் பெண், வெளிநாட்டு ஊழியர்களின் வளர்ச்சியால் உள்ளூரப் பொருமும் சிங்கைவாசி, சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளாகி விட்ட நண்பர்கள் மூலம் வீட்டு வேலைக்காரியாக மனைவியை வரவழைக்கும் சக தமிழக ஊழியர்கள் என அவரது பாத்திரங்கள் வாசிக்க ஆர்வத்தை ஏற்படுத்துபவை.
