
மகரிஷி அஷ்டாவர்கிரர் அருளிச் செய்த அஷ்டாவக்ர கீதை
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொ.வெ. இராஜகுமார்
பதிப்பகம் :கீதாஞ்சலி பதிப்பகம்
Publisher :Geethanjali Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :94
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
மகரிஷி அஷ்டாவர்கிரர் அருளிச் செய்த அஷ்டாவக்ர கீதை என்னும் அத்வைதக் கோட்பாட்டினை, யதார்த்தமாகவும், மிகவும் எளிமையாகவும், மிக மிக ஆழ்ந்த பொருள் கொண்டதாகவும், விளங்க இயற்றப்பட்ட ஒப்பற்ற உபநிடத நூலாகும்.
அது, ஞானப் பேரறிவின் கூறுகளை ஒரு ஞானா சிரியராகவும், குருவாகவும் ஜனக மகாராஜாவிற்குப் போதித்த ஞானக் கருவூலமாகும்.
இந்த ஞான போதனையில், ஜனகர் ஞானத்தைத் தேடும் முகமாக எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், மகரிஷி குருவாயிருந்து அருளிய உபதேசங்களே இந்த ஒப்பற்ற நூலின் அடிப்படைக் கருவாகும்.
அத்தகைய உயர்ந்த போதனைகளை எளிய தமிழில், வசனக் கவிதையாக, இந்நூலின் ஆசிரியர் பொ.வெ. இராஜகுமார், தொகுத்து வழங்கியுள்ளார். இது படிப்பவரின் உள்ளங்களில் ஞானச்சுடரை ஏற்றி ஒளிர்விடச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
