book

தமிழக வரலாறும் பண்பாடும்

₹310+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கா. பெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :247
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123441610
Out of Stock
Add to Alert List

தமிழ்நிலம் தொன்மையானது. தொல்பழங்காலத்தில் தோன்றிய மொழி தமிழ். மிகப் பழங்காலத்திலிருந்தே இலக்கிய இலக்கணங்கள் பெற்ற மொழி தமிழ் பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வை விளக்குவன. அவை பண்பாட்டுக்களங்கள். தமிழில் இலக்கிய வரலாற்று நூல்கள் எண்ணில. ஆனால் தமிழர் நாகரிக வரலாற்று நூல்கள் மிகக் குறைவு. அதுவும் வரலாற்றுப் பேராசிரியர் அறிவியல் அணுகுமுறையில் எழுதிய நூல்கள் மிக மிகக் குறைவு. இந்நூல் நீண்ட காலத் தேவையை நிறைவு செய்கிறது. பல்லாண்டு தமிழக வரலாற்றைப் பாடமாக நடத்திய வரலாற்றுப் பேராசிரியரால் எழுதப் பெற்றது. ஆசிரியர் மிகச் செவ்விய திட்டத்துடன் இந்நூலை உருவாக்கியுள்ளார். நூலின் கட்டமைப்பு ஆசிரியரின் புலமைக்கு வலிமை சேர்க்கிறது. நிலவியல், மானுடவியல், மெய்யியல், பொருளியல், சமூகவியல் முதலிய பல்துறை அறிவு இந்நூலுக்குச் செழுமை சேர்க்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் பன்முகச் சிறப்புக்களை ஆசிரியர் சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளார். பண்பாட்டு வளர்ச்சியின் பரிணாம வளர்ச்சியினை வரலாற்று நோக்கில் நிகழ்வுகள், நிகழ்வுகளின் ஏதுக்கள், அவற்றின் விளைவுகள் முதலியவற்றைத் திட்பநுட்பத்துடன் அறிவியல் பார்வையில் விளக்குகிறார். சமுதாய நோக்கில் தமிழர் ஆராயப்படுவதால் இந்நூல் தமிழ்ச் சமுதாய வரலாற்றை விளக்கும் ஆவணமாகத் திகழ்கிறது. வரலாற்று முக்கியமில்லாத எந்தச் செய்தியும் இதில் கூறப்படவில்லை. அதே நேரத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க எச்செய்தியும் கூறாமல் விடப்படவுமில்லை.