
சாதியற்ற சமூகம் உருவாகுமென நம்புகிறேன்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ. பரமசிவன்
பதிப்பகம் :யாப்பு வெளியீடு
Publisher :Yaappu Veliyeedu
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன. அதாவது, நாட்டுப்புற வழக்காற்றியல் மரபுகளில் பொதிந்திருக்கும் பண்பாட்டு அசைவுகளின் அழகியலையும், அவற்றின் நுண் அரசியலையும், அதனதன் வேர்த் தடங்களையும் எடுத்துரைக்கும் ஆய்வுத் திசைவெளிகளையும் வழிமுறைகளையும் தொ.ப அவர்களின் அறிவுச்செயல்பாடுகள் காண்பித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தின் பன்மைப் பண்பாட்டுக் கோலங்களைப் பண்பாட்டியல் தமிழியலாகக் கட்டமைக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கின்றன
-ஏர்.மகாராசன்
