book

கடவுள்களுடன் தேநீர்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜ. பாரத்
பதிப்பகம் :ஜீவா படைப்பகம்
Publisher :Jeeva Padaippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

1933 செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தது மணிக்கொடி வார இதழ். கே.சீனிவாசன், வ. ரா., டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோரின் கூட்டு முயற்சியால் அது துவங்கப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில், அரசியல் பத்திரிகையாகத்தான் மணிக்கொடி செயலாற்றியது. கால ஓட்டத்திலே மணிக்கொடி கவிதை மற்றும் சிறுகதைகளின் இதழாக மாறியது. மணிக்கொடியின் ஆசிரியர்களில் ஒருவரான, பாரதியின் சீடர், வ.ராமசாமி ஐயங்கார் நடைச்சித்திரம் என்ற உரைநடை வடிவத்தின் முன்னோடி எழுத்துமுறையை மணிக்கொடியில் கையாண்டிருந்தார். தமிழில் புதுமுயற்சியான நடைச்சித்திரம், வாழ்வில் எதிர்கொள்ளும் பல தொழில்துறை நபர்களைப் பற்றிய விவரணைச் சித்திரங்களாக அமைந்தன. அங்காடிக் கூடைக்காரி, மார்க்கட் மாணிக்கம், காவல் காத்தான், கான்ஸ்டபிள் சுப்பையா, தரகர், ஒட்டல் சிப்பந்தி என்று பலரையும் சுவாரஸ்யமான சொல்லோவியங்களாக வ.ரா., எழுதிக் குவித்தார். பின்னாள்களில் அவை வாழ்க்கைச் சித்திரங்கள் என மொத்தத் தொகுப்பாகவும் வெளிவந்தது. இந்நூலில் ஜ.பாரத் கையாண்டிருக்கும் எழுத்து ஒளி வ.ரா.வின் வாழ்க்கைச் சித்திரங்களை நினைவுபடுத்துகிறது. நம்மைச் சுற்றி நிகழும் காரியங்களின் மீது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் முன்முடிவற்ற அக மற்றும் புறத் தாக்கங்களே அவதானிப்புகளாக வடிவெடுக்கின்றன. அவற்றை கட்டுக்குலையாத கலைத்தனத்தோடு தன் எழுத்திலும் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர்.