book

வகுப்பறையின் கடைசி நாற்காலி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. நவீன்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :2
Published on :2016
Out of Stock
Add to Alert List

வட்டார வள மையக்கூட்டம் நடைபெறும் பள்ளி ஆசிரியரிடம் ஒரு ஆசிரியை விசாரித்துக்கொண்டிருந்தார். சார், இங்கே பி.டி.ஏ புக் எங்க விக்குறாங்க? இன்னைக்கு லீவும்மா. நாங்க விக்கல டி.ஓ ஆபீஸ்காரங்க வருவாங்க. அம்மா, கிடைக்கற எல்லா புக்கையும் வாங்கித்தராம, அந்தக் குழந்தை எவ்வளவு படிக்க முடியும்னு பாருங்க. இல்ல சார், அவன்தான் கேட்டான். 99 மார்க் எடுத்திடுவான். அந்த ஒரு மார்க்குக்காகத்தான் கஷ்டப்பட்டுப் படிக்குறான். என்று தொடர்ந்த உரையாடளைக்க்கேட்டு, எனக்குத் தலை வலிப்பதுபோல் இருந்தது. அவ்விடம் விட்டு அகன்றேன். பள்ளிகளும் வீடும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீது காட்டும் அக்கரையில் நூறில் ஒரு பங்காவது மெல்ல மலரும் மாணவரிடம் காட்டுகின்றனவா? மலேசியாவில் தமிழாசிரியராகப் பணிசெய்துவரும் ம.நவீன், நான் ஒரு பின்தங்கிய ஆசிரியன் என்ற உரத்த குரலோடு தனது வகுப்பறை நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். வகுப்பறையின் கடைசி நாற்காலி என்ற அந்த நூல், கவனிக்காமல் ஒதுக்கப்பட்ட குழந்தைகளின் பக்கம் நின்று உரத்த குரலில் பேசுகிறது. கேள்வி கேட்கும் மாணவரைப்போலவே கேள்வி கேட்கும் ஆசிரியரும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிய நிலை நிலவும் இக்காலத்தில் கல்விமுறை மீதான விமர்சனங்கள் அவசியமானவை. விவாதிக்கப்பட வேண்டியவை. நூலிலிருந்து, மாணவர்களுக்கு நாம் வருட இறுதியில் ஒன்றைமட்டும்தான் சொல்லித்தர முயல்கிறோம். அது, திருட்டுத்தனம் செஞ்சாவது ஜெயிச்சிடு.... எளிய உள்ளங்களுக்காக அதிகாரம் வளையுமா என்ன? பெரியவர் சிந்திப்பதைத்தான் 12 வயது மாணவனும் சிந்திக்கவேண்டும் என எண்ணுவதும் அதையே திணிப்பதும் வன்முறை. நாம் உருவாக்குவது விஞ்ஞானிகளை அல்ல,உயர்தரக் கூலிகளை. குழந்தைகளின் நிலையிலிருந்து பார்க்கும் இதுபோன்ற ஆசிரிய, ஆசிரியைகளின் வகுப்பறை அனுபவங்களைத் தொகுக்கவும் விவாதிக்கவும் வேண்டும்.