book

தீவாந்தரம்

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அண்டனூர் சுரா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789395442022
Add to Cart

இந்த நாவல் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இரு நாட்களில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலானது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் மூவரும் திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசியதால் புனையப்பட்ட தேசத்துரோக வழக்கு; அவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு நடந்தேறிய திருநெல்வேலி கலவரங்கள்; அதை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், அதனையொட்டி ஏற்பட்ட வழக்கு விசாரணை ஆகியவற்றைப் பேசுகிறது. கொடும் மனநிலையோடு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதி பின்ஹேயின் தீர்ப்பில் ஆரம்பித்து, அந்தத் தீர்ப்பின் தண்டனையைக் குறைத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள் அர்னால்ட் ஒயிட் மற்றும் மில்லர் ஆகியோர் வழங்கிய தீர்ப்புடன் முடிகிறது. இதற்கிடைப்பட்ட காலத்தில் நடந்தேறிய பல சம்பவங்களைக் கோர்த்து அக்காலத்து மனநிலையை நம் கண் முன்னே வரலாற்றுப் புனைவாக நிறுத்துகிறது.