book

மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :2
Published on :2018
ISBN :9789388450034
Add to Cart

இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய முயற்சி மேற்கொண்டுள்ளார் மூஸா ராஜா. மிர்ஸா காலிப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 440 கவிதைகளை பாரஸீக மொழியிலிருந்து உருதுமொழியிலும் பின் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றின் தமிழாக்கமே இந்த நூல். காலிபின் பாரஸீகக் கவிதைகள் காதல், வேட்கை, பரவசம், தன்னையறிதல், வாழ்க்கை, மரணம், மதம், மறைபொருள் எனப் பல களன்களைத் தழுவியுள்ளன. சில சமயங்களில் பக்திசார் மரியாதை தவிர்த்தவையாகவும் வேறு சமயங்களில் தீவிரத்தன்மையும் பரவசமும் நிறைந்தவையாகவும் விளங்கும் காலிபின் கவிதைகள் அவருடைய சூஃபி சிந்தனைகளை துணிச்சலாக, துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.