செம்மொழிச் செல்வங்கள் (இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம்)
₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நக்கீரனார், இரா. இளங்குமரனார்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :344
பதிப்பு :1
Published on :2009
Add to Cartமுதலாவதாக மேற்குறிப்பிட்ட தலைப்பை இருபெரும் பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளன, அவை
1. செம்மொழிகளில் தமிழின் தொன்மை
2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்
2. சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்
என்பதே அவ்விரு பெரும் பிரிவுகள். இதில் எண் ஒன்றில் குறிப்பிட்டுள்ள தலைப்பான செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்றத் தலைப்பை மேலும் இரு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளன. அவை செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்பதில் ‘செம்மொழிகளில்’ என்றச் சொல்லின் பொருண்மை தமிழுடன் பிற மொழிகளும் செம்மொழிகளாக கருதப்படுகின்றன என்பதேயாகும். தமிழைப் போன்றே உலக மொழிகளில் செம்மொழிகள் என்ற ஒரு தனிப்பிரிவு உள்ளன என்பதை தலைப்பே உணர்த்துவதாக உள்ளன. அப்படியாயின் தமிழுக்கு இணையாக இன்னும் பிற செம்மொழிகளின் தொன்மையை தமிழுடன் ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளன. மேலும் அவற்றில் எவையெவை செம்மொழித் தர வரிசையில் இடம் பெறுகின்றன. அத்துடன் அவற்றின் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் ஒப்பாய்வு செய்ய வேண்டியுள்ளன. ஒப்பியல் நோக்கு வாயிலாகத்தான் ஒரு மொழியின் செம்மொழித் தொன்மை குறித்தான முடிவிற்கு வரஇயலும். உலகச் செம்மொழிகளில் எந்தெந்த மொழிகள் செம்மொழிகள், அவ்வரிசையில் தமிழிற்கான இடம் எவ்விடத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நோக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இவற்றில் விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி பொது நோக்குடன் நிறைகள் மற்றும் குறைகளையும் சீர்தூக்கி ஆய்வது ஒரு உண்மையான ஆய்வின் நோக்கமாக இருக்குமென்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் பரந்த நோக்கமாகும்.