book

ஊன் உடம்பு (நமது மருத்துவ நல ஆலோசனைகள்)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. A.B. ஃபரூக் அப்துல்லா
பதிப்பகம் :துருவம் வெளியீடு
Publisher :Dhuruvam Veliyeedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

* கொழுப்பு சாப்பிட்டால் ஆபத்தா? * நீரிழிவு நோயை உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? * தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் மஞ்சள் கரு சாப்பிடலாமா ? * காய்ச்சலின் போது சாப்பிடும் உணவு முறை என்ன? - அன்றாடம் எழும் இப்படியான பல கேள்விகளுக்கு, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பும் விவரங்களை உள்ளடக்கிய படைப்பு இந்ந நூல். நவீன மருத்துவத்தின் மிக முக்கிய நம்பத்தன்மைகளில் முதன்மையானது, காலம்தோறும் விரிவடைந்து செல்லும் அதன் வளர்ச்சி. தொழில்நுட்ப மற்றும் மிக நுணுகிப் பார்க்கும் வளர்ச்சி. அதைப்போலவே, வர்த்தக வளர்ச்சியும். இந்த மூன்று புள்ளிகளும் இணையும் இடத்தில், கொரோனா போன்ற திடீர் முடக்கம் வேறொரு வடிவில் மக்களுடன் மருத்துவத்தை இணைத்துள்ளது. மருத்துவருடன் நேரடி தொடர்பில்லாமல், மருத்துவ ஆலோசனைகளை கொண்டு செல்வது இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. அதுவும், வர்த்தக வலைபின்னலுக்குள் கொண்டுவரப்பட்டு அந்நியமாகும் காலத்தில்தான், நமது மக்கள் மருத்துவர்கள் எளிய தீர்வுகளை, சமூக ஊடகங்கள் வழி மக்களுக்கு கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, தனது அறிவை, ஆலோசனைகளை எளிய நடையில், மக்களின் மொழியில் பேசுகிறார். அவசரகால தேவைகள் அல்லாத, இந்த பொதுநல மருத்துவ ஆலோசனைகள் அனைவருக்கும் அவசியம் என அறிந்து இந்த நூலை கொண்டுவருகிறோம்.