book

நாயகன் மார்ட்டின் லூதர் கிங்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அஜயன் பாலா
பதிப்பகம் :நாதன் பதிப்பகம்
Publisher :Naathan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :85
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

இந்த விலங்குத்தன்மையிலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மை முழுமனிதனாக்குவது எது தெரியுமா? நாம் நமது தேவைகளை கடந்து வாழும் சிலகணங்களில் தான். அதனால்தான் தெருவில் நம் முன் நீளும் கண் தெரியாத சுருக்கம் நிறைந்த கைகளில் சில்லறைகளை போடும் போது நம் மனசு லேசாகிறது.அல்லது சாலையில் அடிபட்டுவிழுந்த ஒரு மனிதனுக்கு ஓடிசென்று உதவி செய்கிற போது கடவுளை தீண்டிய இனபத்தை வீடுவந்து சேரும்போது உணரமுடிகிறது. உண்மையில் வாழ்வின் அர்த்தமுள்ள கணங்கள் இவைதான். இது போன்ற காரியங்களீன் மூலமாகத்தான் நமதுமனம் மேன்மையான உணர்வுகளை நோக்கி இயல்பாக எம்புகிறது. மனித குல விடுதலை வரலாற்றில் யார்யாரெல்லாம் அகிம்சையின் வழி போராடி வெற்றியடைந்தார்களோ அவர்களது இறுதி நிமிடங்களை ஒரு வன்முறை செயல் மூலம்தான் தீர்மானிக்கப்படிருக்கிறது சரித்திரம் நமக்கு கான்பிக்கும் நகை முரண் , மகான் ஏசு, மாகாத்மா காந்தி இவர்களின் வரிசையில் இங்கு நம்மிடம் வந்து சேர்பவர் மார்டின் லூதர்கிங். அகிம்சையை கண்டுபிடித்த அதனை அரசியலில் ஒரு கருவியாக பயன்படுத்தி வெற்றிபெற்ற காந்தியை விடவும் அவரை பின் தொடர்ந்த மார்டின் லூதர்கிங்கின் சாதனை மகத்தானது.. அதற்குகாரணம் காந்திக்கு பின்னால் அவர்முன் கைகட்டி நிற்க ஒரு காங்கிரஸ் பேரியக்கமே இருந்தது. அதனை வழிநடத்தி ஒருங்கிணைத்ததில்தான் அவரது பங்கு. மேலும் அன்று நடந்த இரண்டாம் உலகபோர் அவரது வெற்றிக்கு முழு சாதகமாக இருந்தது. ஆனால் மார்டின் கதையோ வேறு. அவர் தனி மனிதர். அவருக்கு எதிராக நிற்பவர்களோ பெரும் கூட்டம் . ஆனால் தனது மக்களோ போதிய அறீவு கிடைக்கபெறாதவர்கள் அவர்களிடம் கடும் வலியும் உணர்ச்சியும் மட்டுமே இருந்தது. பழிவாங்கும் எண்ணம் நெருப்பாக கொதித்தௌ அதற்கான நியாயங்களும் இருந்தன. அப்படிப்பட்ட கூட்டத்தை அகிம்சையின் பால் திருப்பி தனது மக்களுக்கு மகத்தான விடுதலையை உரிமையை அதிகாரவர்க்கத்திடமிருந்து மீட்டுகொடுத்த அவரது செயல் எத்தனை மகத்தானது எனபதற்கு இந்த அவரது வாழ்க்கை வரலாறு சரியான சாட்சியாக இருக்கும் என நம்புகிறேன்.