book

சந்தியா வந்தனம் காயத்ரி மகிமை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.என். பரசுராமன், சந்தான குருக்கள்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :பக்திநூல்கள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

இந்த நூல் சந்தியாவந்தனம் காயத்திரி மகிமை, புலவர் சந்தான குருக்கள் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

உபாகர்மா - சாமிதா தானம் 

தொகுப்பு: சிவாகம வாசஸ்பதி, சிவகாம வாஸாஸ்பதி, தமிழ்ச்செம்மல், ஜோதிடர், புலவர் ஏ.பு.சந்தான குருக்கள், MABED.

முன்னுரை: 

மலர்தலை உலகில் தற்போது கலியுகம் நடைபெறுகிறது. சனாதன தர்மம் எனப்படும் வாழ்வியல் நெறிமுறைகள், தர்மசாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது. அவற்றில், கலியுகத்தில் தர்ம நியமங்கள் கால் பங்குதான் கடைபிடிக்கப்படும் என்று தர்ம சாஸ்திரங்கள், கூறுகின்றன. அதன்படி தான் தற்போதைய நிலையும் உள்ளது.

தர்ம சாஸ்திரங்கள், சமூகத்தை நான்கு வகை வருணங்களாக பிரித்து அவற்றுக்குரிய நியமங்களை வகுத்து வைத்துள்ளது. அதன்படி, பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் என முதல் மூன்று பிரிவினரும் உபநயனம் செய்து கொள்ளவேண்டும். காயத்ரீ மந்த்ரம் உபதேசம் பெறவேண்டும். தினமும் மூன்று சந்தியா காலத்தில் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும். ஆனால் தற்காலத்தில் பிராமணர்கள் தான் உபநயனம் செய்து கொள்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சந்தியா வந்தனம் செய்வதில்லை. ஏனெனில் இக்கால வாழ்க்கை முறை என்றும், வேலையின் காரணம் என்றும், பலவகையில் செய்ய முடிவதில்லை என்றும், நியமங்களைக் கடைபிடிக்க இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் தற்காலத்தின் நிலைமைக்கேற்ப இவற்றைக் கடைபிடிக்க முடியும், என்பதை எடுத்துச் சொல்லுவதே இந்நூலின் கருது. மேலும் சந்தியா வந்தனம் பற்றிய முழுமையான தகவல் அறியும் விதமாக இந்நூல் அமைக்கப் படுகிறது.

முதல் மூன்று வர்ணத்தார்களுக்கு மட்டில் இவை சொல்லப்படுகிறதா, எனில் அப்படியல்ல. நான்காவது வர்ணத்தார்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்ட சமய தீக்ஷை பெற்றுக் கொண்டு அதன்படியான சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

வைத்திய நாத தீக்ஷதீயம் என்னும் ஸ்மிருதி முக்தாபலம் என்னும் நூலின் ஆக்னிக காண்டத்தில் சந்தியாவந்தனம் என்னும் தலைப்பில் சொல்லப்பட்டதை எளிமையாக்கி சொல்லப்படுகிறது. வேறு கிரக்கிய சூத்திரப்படியான தகவல்கள், புராண நூல்களில் கூறப்பட்டுள்ளவை. வழக்கத்தில் உள்ளவை என பல விவரங்களும் சொல்லப்படுகிறது.

அல்லயன்ஸ் புத்தக பதிப்பக உரிமையாளர் திரு ஸ்ரீநிவாஸன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்நூல் எழுதப்பட்டது. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்றோர்கள் குறைகானின் சுட்டிக் காண்பித்தும் நிறைகாணின் ஆதரவளித்தும், ஊக்குவிக்குமாறு வேண்டுகிறேன். யாவரும் நியமங்களைக் கடைபிடித்து நலம் பெற வேண்டும், என்பதே இந்நூலின் குறிக்கோளாகும்.

- ஏ.பு.சந்தான குருக்கள். 

ஆசிரியரைப் பற்றி: ஏனாத்தூர் (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த ஊர், புஷ்பரத குருக்கள், சகுந்தலா தம்பதியருக்கு முதல் மகன். ஆதிசைவ குருக்கள், பிறந்தநாள்:10.9.1944.

*  கல்வி - புலவர் பட்டயம், எம்.ஏ.பி.எட்., ஆசிரிய பயிற்சி.

* பணி - 1963 முதல் 2002 ஆசிரியப் பணி, அர்ச்சகர், புரோகிதர், ஜோதிடர்.

* இதர கல்வி - யஜுர் வேதம், ஜோதிடம், சித்த மருத்துவம், சைவ சித்தாந்தம், ஆகமப் பயிற்சி, தர்ம சாஸ்த்திர பயிற்சி

* குருவானவர்கள் - கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் (காஞ்சிபுரம்), டி.எஸ்.நடராஜ குருக்கள் (திருக்கச்சூர்). என்.கே. சுந்தரேச குருக்கள் (காஞ்சிபுரம்), கோ.பாலசுந்திர நாயகர் - தமிழ் பேராசிரியர் (காஞ்சிபுரம்), ஞானப் பிரகாச சுவாமிகள் மடத்தில் சைவ சித்தாந்தப் பயிற்சி.

* தீஷா குரு - இவர் மாமனார் டி.எஸ்.நடராஜ குருக்கள், திருக்கச்சூர்.

* வேறு கலைகள் - விவசாயம், அலங்காரம்.

* மறக்க முடியாத நிகழ்ச்சி - 1957-ல் காஞ்சி பெரியவர் இவர் வீட்டில் முகாமிட்டு, ஆசி வழங்கியது. வேதம், சாஸ்திரங்கள் நன்கு வரும் "படி" என்று ஆசிர்வதித்தார். அது  நிகழ்ந்தது.

* வெளியிட்ட நூல்கள் -  1.தர்மம், 2.தர்ம சாஸ்திரங்களும் திருக்குறளும், 3.தர்ம சாஸ்திரமும் மருத்துவமும், 4.மணி விழா, 5.கோதானம், 6.சந்தியாவந்தனம், 7.ஆசிர்வாதம், 8.ஜோதிடத்தில் பஞ்சாங்கம்.

* கௌரவப் பட்டங்கள் - சிவகாம கலாநிதி. சிவாகாம வாஸஸ்பதி, தமிழ்ச் செம்மல்.

* யாத்திரைகள் - 150-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற தலங்களில் தரிசனம், கையிலாய யாத்திரை கேதார்நாத், பத்ரிநாத், பசுபதிநாத் யாத்திரை.