book

கடைசி அத்தியாயம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டுக்கோட்டை பிரபாகர்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

துப்பறியும் நாவல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மூளைக்குள் கட்டங்கள் அமைத்து கற்பனையில் காய்களை நகர்த்தி விளையாடும் சதுரங்கம் போன்ற சுவாரசிய சவால். ரசித்து ரசித்து எழுதியவை ரசித்து ரசித்து படிக்கப்பட்டதால் நூற்றுக் கணக்கில் எழுதி விட்டுத் திரும்பிப் பார்த்தால் ஒரே ரத்த வாடையும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகளும், போலீஸ் சைரன்களும் கனவிலும் துரத்தின. பிறகு துப்பறிவதை கொஞ்சம் சைடில் வைத்துவிட்டு காதலிக்கவும், கிச்சுகிச்சு மூட்டவும் துவங்கினேன். ரொமான்சும், நகைச்சுவையும், சமூகமும் எளிதாய் வந்தன. அவையும் வரவேற்பைப் பெற்றன. இப்படி ஆல் ரவுண்டராவதற்கு பேனா பிடித்ததிலிருந்து சுமார் பத்து வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்போதும் என்னை க்ரைம் கதை எழுத்தாளனாக மட்டும் சிலர் அடையாளப் படுத்தும்போது கொஞ்சம் மனம் கோணிக்கொள்ளும். 'கடைசி அத்தியாயம்' கதை மாலைமதியில் நான் எழுதிய ஒரு த்ரில்லர். இந்தக் கதையில் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு. அது கதையில் வில்லன் ஒரு நாவலாசிரியர். (பெயர்: காரைக்குடி கார்த்திக்) கதை வெளி வந்ததும் சில எழுத்தாள நண்பர்கள் அதெப்படி ஒரு எழுத்தாளரை வில்லனாகச் சித்தரிக்கலாம் என்று உரிமையுடன் சண்டை போட்டார்கள்.

என் பதில் இதுவாக இருந்தது: அவன் மட்டும் என்ன வானத்திலிருந்து குதித்து வந்த தேவ தூதனா? ஒரு காவல்துறை அதிகாரியை, ஒரு அரசியல்வாதியை, ஒரு டாக்டரை, என்ஜினியரை, வக்கீலை, ஏன் நீதிபதியைக் கூட கெட்டவர்களாக பல படைப்புகளில் காட்டும்போது... ஒரு எழுத்தாளன் மட்டும் கெட்டவனாக இருக்க முடியாதா என்ன? இது மட்டும் இல்லை... 'கண்டுபிடியுங்கள்!' என்னும் நாவலில் ஒரு துப்பறிவாளனையே வில்லனாக ஆக்கியிருந்தேன். நல்லதும், கெட்டதும் கொண்ட மனசுதான் எல்லோருக்கும். அதில் எதன் சதவிகிதம் அதிகம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடி சமூகத்தில் பெயர் கிடைக்கிறது. முழுக்க நல்லவனோ, முழுக்க கெட்டவனோ உலகில் இல்லை என்பது என் அபிப்பிராயம். ஆகவே எழுத்தாளனும் விதி...  என்ன, சரிதானே?