தென்னாட்டில் பழத்தோட்டம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.கு. கணபதி ஐயர்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஉ.வே.சா.அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்
வித்துவான் ச.கு.கணபதி ஐயர். கலைமகள் பத்திரிகையில், அறிவியல் கட்டுரைகள்
எழுதி வந்தார், 'தமிழ்ப் பொற்பணியாளர்' ச.கு. கணபதி ஐயர். உ.வேசா
அவர்களிடம் பல வருடங்கள் உடனிருந்து நூற்பதிப்பு விஷயத்தில் நல்ல பழக்கம்
பெற்றிருந்தார். உ.வே.சா நூல் நிலையத்தின் பதிப்புக் குழுவின்
தலைவருமாகவும் ஸ்ரீமான். ச. கு. கணபதி ஐயர், பி. ஓ. எல். இருந்தார்.
கலாக்ஷேத்திரத்தின் தமிழாசிரியராகவும், உ.வே.சா நூல் நிலையத்தின்
நூற்பரிசோதகருமாகவும் செயல்பட்டார் ச.கு.கணபதி ஐயர், பி.ஓ.எல்.
வேளாண்மை விவசாயம், தோட்டக்கலை, ஆடு வளர்ப்பு பற்றிய நூல்களை ச. கு. கணபதி ஐயர் எழுதியுள்ளார். சென்னை கிராமஜோதி நூலகம் மூலம் தமிழின் கதை, வாழும் வழி (குடும்பம் பொருள் நூல்), கிராம கூட்டுறவு, வீட்டில் மீன் காட்சி, கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் சாதனை, தமிழ் இலக்கிய கதைகள், தென்னை வளர்ப்பு, தென்னாட்டில் பழத்தோட்டம், வாத்தும் வாழ்வும், தமிழில் பிற மொழி கலப்பு, ரமாபாய் சரஸ்வதி, நவரசங்கள், கலைமகள் காரியாலயம் வெளியிட்ட ஒட்டக்கூத்தர், பாரதி அச்சுக்கூடம் வெளியிட்ட வில்லி பாரதத் திறவுகோல் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
இவரின் நரசிம்மாவதாரம் என்ற சிறுகதை, அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கதைக்கோவை 3 என்னும் தொகுப்பு நூலில் 60 எழுத்தாளர்களின் 60 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.