book

விஜய் ஜெயித்த கதை

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
Out of Stock
Add to Alert List

தமிழ் சினிமாவுலகில் நடிகர் விஜய் தனக்கென்று தனி இடத்தைத் தக்க வைத்துள்ளார். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். விஜய் அவரது தந்தையால் சினிமாவுலகில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், திரைப்பட இயக்குநர் விக்ரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படத்தின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டார். அதற்குப்பின் வெளிவந்த பெரும்பாலான படங்கள் அவருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தன.குறிப்பாக.... 'காதலுக்கு மரியாதை' 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற திரைப்படத்தில் விஜய்யின் எதார்த்த நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தமிழ்த்திரையுலகில் இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்துறையில் விஜய்க்கு ஏற்பட்ட அனுபவங்களை, 'விஜய் ஜெயித்த கதை' எனும் நூலின் வாயிலாக மிக அழகாக தொகுத்தளித்திருக்கிறார், நூலாசிரியர் சபீதா ஜோசப்.இந்நூல் தளபதி ரசிகர்களுக்கு தலை வாழை விருந்தாகும்.