தமிழ் சங்கம் டூ காவிச் சங்கம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789385125775
Out of StockAdd to Alert List
தமிழன் தனது பழங்காலப் பெருமைகளை நினைத்துப் பார்க்க வேண்டாம்.
ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னோர் வாழ்ந்த கேவலமான
வாழ்க்கையைக்கூட நினைத்துப் பார்க்க மறுப்பதுதான் மிகப்பெரிய
வேதனை.தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து
மீட்டெடுத்து, இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளியிருக்கும்
முன்னேற்றத்தைக்கூட நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள். மறுத்தால்கூட
பரவாயில்லை, சகதியைச் சந்தனம் என்று வர்ணித்து அதிலே விழக்கூட தயாராக
இருக்கிறார்கள் என்பதுதான் கவலையளிக்கிறது.நீதிக்கட்சி ஆட்சி
காலத்திலிருந்து இன்றுவரை ஆரியச் சதி இங்கு வேரூன்ற முடியவில்லை. ஆனால்,
அவ்வப்போது ஆரியர்களுக்கான அடிமைகள் மட்டும் சிக்கிவிடுகிறார்கள். 2017 ஆம்
ஆண்டு தமிழகத்தில் காவி படர்ந்துவிடுமோ என்று நினைத்திருந்த வேளையில்,
காவியை விரட்டியடித்திருக்கிறார்கள் என்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி
இருக்கிறது.