
பியாக்கம்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலாஜி தரணிதரன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994143
Add to Cartயார்குழந்தைகளிடம் தன்னை ஒப்புக் கொடுக்கிறானோ, யார் அந்த உலகத்தில்தன்னுடைய வளர்ந்த உலகத்தை ஒன்றிணைத்து விடுகிறானோ, யார் சதா இந்தஉலகத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறானோ, யார் எதையும் எவரையும்சந்தேகிக்கத் தெரியாதவனாக இருக்கிறானோ அவன் ஒன்று மூத்தபடைப்பாளிகளில் எனில் யூமா வாசுகியாக, முகுந்த்நாகராஜனாக இருப்பான். புதிய படைபாளிகளில் எனில் பாலாஜி தரணிதரனாக இருக்கிறான்.
கல்யாணி.சி
பியாக்கமாஅது என்ன?’ ஏதோ தின்கிற பொருள்என்று புரிந்தது. என்ன ‘பபிள்கம்’ போலவா என்றெல்லாம் குழம்பினேன். ஆனால் கிட்டத்தட்ட உரைநடை போல ஒலிக்கிற கவிதையில்அதைத் தாண்டி மின்மினிப் பூச்சியின் மறைந்து மறைந்து ஒளிரும் வெளிச்சம்போல ஏதோ ஒன்று இருக்கிறதுஎன்று என் கவிதை மனம்தேடியது. அப்போதுதான் எனக்கு அவர் உலகத்துக்குள் புகுவதற்கானதெறிப்பான நொடி, அற்புதமான கணம் பிறந்தது. அதுகவிதைக் கணம். அப்படி வாழ்வின் கணங்கள் எல்லோருக்கும்ஒரு கவிதை மனதைத் தரும். கவிதையின் மகத்துவம் அதுதான். இது வேறெந்த இலக்கியப்படைப்புக்கும் வாய்க்காதது.
கலாப்ரியா
