பயணங்களே
பல நேரத்தில் புதுவாழ்வின் திசையைக் காட்டுகிறது,அதை தெரிந்து கொண்டு
அத்திசையில் பயணிப்பவனின் வாழ்வில் மாற்றங்கள் சுகமாக வந்து சேர்கிறது.
நண்பர்களுடன்
டூர் வந்த இடத்தில் அவர்களின் கிண்டல் பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது
போன கஜலக்ஷ்மி அவர்களிடம் இருந்து விலகி அந்த வழியே வந்த ப்ரித்வியின்
காரில் பயணப்படுகிறாள்.
தன் வேலையை முன்னிட்டு தனிமையைத் தேடி
பயணப்படும் ப்ரித்வியின் வண்டியில் ஏறியவள் தன் பேச்சால் அவனின் கவனத்தைச்
சிதறடித்துக் கொண்டே வர ஒரு கட்டத்தில் அவளின் பேச்சில் அவளிடமே விழுந்து
போனவனுக்கு அவள் வேறு ஒருவனுக்கு நிச்சயம் ஆனவள் என்று தெரியவந்தாலும்
அதில் அவள் விருப்பம் இல்லை என்று தெரிந்து கொண்டவன் அவளைத் திருமணம் செய்ய
முடிவெடுப்பதற்குள்ளே அவளின் வீட்டுக் கட்டுப்பாட்டுகளால்
அடைக்கப்படுகிறாள்.
கஜலக்ஷ்மியை தேடி அவள் ஊருக்கே வருபவனுக்கு
அங்கே இருக்கும் கட்டுபாடுகள் பெரும் தலைவலியை கொடுக்க அவ்வூரில் இருக்கும்
முத்துவுடன் சேர்ந்து அவன் போட்ட திட்டத்தை மீறி பார்வதி ஒரு நாடகத்தை
அரங்கேற்றி ஆசைப்பட்ட இருவரையும் திருமணப் பந்தத்தில் இணைக்கிறார்.
ஜாதியை
காரணம் காட்டி ப்ரித்வியை மறுப்பதால் சிறுவயதில் ஓடிப்போன தன் மகன் தான்
இவன் என்று பார்வதி சொன்ன வார்த்தை ப்ரித்வியை அந்த ஊரின்
மாப்பிள்ளையாக்குகிறது.
கதாபாத்திரங்களின் இயல்பான கோர்வை கதையைச் சுவாரசியமாக்குகிறது.