இந்திக்கு இங்கே இடமில்லை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
வெடி குண்டுதுப்பாக்கி – பீரங்கி இவைகளுக்கு அப்பாற்பட்ட சக்தி, காந்திய நெறியுடையோரின் கண்களில் தவழும் அமைதிக்கு உண்டு.
பூகம்பம், எரிமலை, பெரும் புயல் இவைகளுக்கும் மேற்பட்டசக்தி, புத்தன் வழி நடப்போரின் வார்த்தைகளுக்கு உண்டு!
ஈட்டி முனைகளுக்கு இல்லாத சக்தி, நாட்டு மக்களின் இதயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு உண்டு என்பதைத்தான் அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட - இந்தி ஆதிக்கத்தை வேரொடு கெல்லி எரியும் தீர்மானம் எடுத்துக் காட்டுகிறது.
திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுகின்ற போது சொன்னார்: “உரிமைகளைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வேட்டு முறை; மற்றொன்று வோட்டு முறை; இதில் முதல் வழியிலே எனக்கு நம்பிக்கை இல்லை; இரண்டாவது வழியான ‘வோட்டு’ முறையிலே தான் நாம் உரிமைகளைப் பெறவேண்டும். அந்த வழிதான் வெற்றியைத் தரும்” என்றார்.
‘வோட்டு முறை’ வெல்லும் என்று 1956-ல் தத்துவ முழக்கமிட்டார் அண்ணா. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தத்துவம் இந்தி ஏகாதிபத்தியக் கோட்டையின் அடிக்கல்லை அசைத்திருக்கிறது.
‘இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கத்தான் போகிறோம், அது தான் ஆட்சி மொழி! எதிர்ப்போர் என்ன செய்துவிடுவார்கள்’ என்று திமிர்வாதம் பேசியவர்கள் இன்று - தமிழக அரசின் தீர்மானத்தை கண்ட பிறகு “என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்கள். இந்தி வெறியர்களுக்கு எந்த முறையில் சொன்னால் புரியுமோ - அந்த முறையிலே அண்ணாவின் முடிவு அமைந்திருப்பதால் இந்தி வெறியர்கள் ஊமைத் தனமாகக் குமுறுகிறார்கள்.
தமிழன்னையின் மலர் விழிகளிலே எரிகொள்ளியைப் பாய்ச்சுவது தான் இந்தி ஆட்சிமொழிச் சட்டம்! அதனை எதிர்த்து, சிங்கத்தமிழன் சின்னச்சாமி முதலாக எட்டுத் தங்கங்கள் ரத்தம் சுண்டச் சுண்டத் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களின் தியாகத்துக்கு தமிழக அரசு செலுத்திய காணிக்கை தான் “இந்தி இனி இல்லை, இல்லை” என்ற தீர் மானம்,
“தமிழ்நாடு எனப் பெயர் சூட்டும் தீர்மானம் வந்த போது முதல் முறையாக மகிழ்ந்தேன், சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்ட வடிவத் தீர்மானம் வந்தபோது இரண்டாவது முறையாக மகிழ்ந்தேன் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் வந்தபோது மூன்றாவது முறையாக உளம் பூரிக்க மகிழ்ந்தேன்” என்று கேட்போர் மெய் சிலிர்க்கக் கூறினார் அண்ணா.
“தமிழகத்தில் இனி எதிலும் இந்தி இல்லை’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஜனவரி 23-ந் தேதியன்று சட்ட மன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசியபோது தன் மூத்த பிள்ளைக்கு - தமிழகத்தின் முதல்வருக்கு தமிழன்னை முத்த மழை பொழிந்த காட்சிதான் அன்று எல்லோரது மனக் கண்களிலும் ஆனந்தக் கண்ணீரைத் தேக்கியது.
சட்டமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தையும் அதன் மீது இரண்டு மணி நேரம் அண்ணா அவர்கள் தந்த கருத்துரைகளையும் வரலாறு தன் இதயத்தில் பதித்துக் கொண்டது. அத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க கருத் துரையை-தேன் மழையை - நூல் வடிவாக்கித் தந்துள்ளோம். ஒவ்வொரு இல்லத்திலும் - இதயத்திலும் இருக்க வேண்டிய நூல் இது.