book

திருமுகம் (ஈரானிய நாவல்)

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பி.எம்.எம். இர்ஃபான், முஸ்தஃபா மஸ்தூர்
பதிப்பகம் :சீர்மை நூல்வெளி
Publisher :Seermai Noolveli
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788195387540
Out of Stock
Add to Alert List

ஈரானிய எழுத்தாளர் முஸ்தஃபா மஸ்தூரின் ‘திருமுகம்’ நாவலின், முதன்மைக் கதாபாத்திரமான யூனுஸ், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது யூனுஸை அலைக்கழிக்கச் செய்கிறது. பாஷாவைப் போலவே அனைத்தையும் தர்க்கத்துக்கு உட்படுத்தி விடை காண வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவராக வெளிப்படுகிறார் யூனுஸ். கடவுள் இல்லையென்றால் இந்த உலகம் என்ன ஆகும்? ஆனால், உண்மையில் கடவுள் இருந்தால் ஏன் இத்தனை துயரங்கள், வலிகள், போர்கள், நோய்கள்…? இக்கேள்விகள் யூனுஸை அலைக்கழிக்கின்றன. யூனுஸின் காதலி சாயாஹ், கடவுள் நம்பிக்கை கொண்டவர். கடவுளை நம்புதலே வாழ்க்கைக்கான அர்த்தமாகப் பார்ப்பவர். யூனுஸின் நண்பர்களான மஹர்தாதும் அலீ றிளாவும் கடவுள் குறித்தும் உலகின் அர்த்தம் குறித்தும் குழப்பமற்றவர்கள். அதிலும் அலீ றிளா தத்துவார்த்தப் பார்வையுடன் கடவுளையும் உலகையும் புரிந்துகொண்டவர். இவர்கள் ஊடான யூனுஸின் நாட்களாக இந்நாவல் விரிகிறது. இந்நாவலின் போக்கை இந்த வசனங்களின் வழியே புரிந்துகொள்ள முடியும். யூனுஸின் எண்ண ஓட்டம்: “கடை வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், சமையல்காரர்கள், இனிப்பு வியாபாரிகள், ஓட்டுநர்கள், மாணவர்கள், தத்துவவியலாளர்கள் இன்னும் எத்தனையோ மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்தை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் தலைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது… இறைவனின் இருப்பை ஏற்பதா மறுப்பதா என்பதற்குத் திருப்தியான சான்றெதுவும் கிடைக்காமல் கடிகாரத்தின் பெண்டுலம்போல் நான் ஐயங்களால் மிகக் கடுமையாக அலைக்கழிந்துகொண்டிருந்தேன்.” யூனுஸைப் பார்த்து அலீ றிளா கூறுவது: “நீ சட்டென்று உன்னிடமே தோற்றுவிடுவாய் என்று பயப்படுகிறேன். நீ பார்க்கக்கூடியவற்றையெல்லாம் பார்க்க முடியாமல் மறைக்கும் அளவுக்கு அவற்றை நீ கடுமையாக நெருங்கியிருப்பது எனக்கு அச்சமளிக்கிறது… திறப்புகள் கதவுகளை எப்படி இலகுவாகத் திறக்கின்றனவோ அப்படியே பூட்டவும் செய்கின்றன. தத்துவம் கதவை முற்றாகவே பூட்டிவிட்டது போலும்!” வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன, மரணத்துக்கான அர்த்தம் என்ன, இறைமை என்பது என்ன, கடவுளின் இருப்பை எப்படி உணர்வது, வறியவர்கள், நோயாளிகள், போரைச் சந்தித்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் என்ன, பின்நவீன உலகில் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் பிடிமானமாக எதைப் பற்றிக்கொள்வது என்ற கேள்விகளாக இந்நாவல் அமைந்திருக்கிறது.