பிரம்மா எழுதிய தலையெழுத்து (வேதாந்த ரகசிய வரிசை - 3)
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cartவானொலியில்
800க்கும் மேற்பட்ட சிந்திக்கத் தூண்டும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
மேலும் பத்திரிக்கைத் துறையில் இவரது பங்கு இன்றியமையாதது. 'பாக்யா'
பத்திரிகையின் பாசறையில் பயிற்சி பெற்றவர். இயக்குநர் திரு.மு. பாக்யராஜ்
அவர்களின் பேரன்பைப் பெற்றவர். 15 வருட காலம் நிருபராகப் பணியாற்றி
8000க்கும் மேற்பட்ட நேர்காணல்களை நிகழ்த்தியிருப்பவர். தேவி, தாய்,
மங்களம், இதயம் பேசுகிறது, சரவணா ஸ்டோர்ஸின் வார, மாத இதழ்கள், நக்கீரன்
குரூப்பின் 'ஓம் சரவண பவ' மாத இதழ் மற்றும் தினகரன், மாலை முரசு,
தினத்தந்தி போன்ற நாளேடுகளிலும் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை
எழுதியுள்ளார்.
'சைக்கோ'
மாத இதழிலும், 'பாக்யா' வார இதழிலும் உதயசந்திரிகா, பொன்முடி, பாகேஸ்வரி
சம்பத்குமார், சுகப்பிரியா, கானமஞ்சரி சம்பத்குமார் போன்ற புனைப்பெயர்களில்
பேட்டிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஜெனரல்
கரியப்பாவின் 'எனது போர்கால அனுபவங்கள்', 'இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடி
வருவது ஏன்?", "அரவாணிகளின் வாழ்க்கை வரலாறு", "கிராமத்து தேவதைகள்",
"சித்தர்களின் வாழ்க்கை" வரலாற்று நூல்கள், பல துறைகளைச் சேர்ந்த
மருத்துவக் குறிப்புகள் போன்றவை இவரது பேட்டி கட்டுரைகளில்
குறிப்பிடத்தக்கவை. ஆன்மிக சம்பந்தமாக சுமார் 75க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியுள்ளார்.
அகில
இந்திய உரிமை பாதுகாப்பு அமைப்பு சட்ட ஆலோசகராகவும், சென்னை மண்டலத்தின்
செயலாளராகவும், தமிழ்நாடு மீடியா கிளப் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து
வருகிறார்.