book

வைர வரிகள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாலி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :166
பதிப்பு :1
Add to Cart

(நினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

‘வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.

இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்’

கண்ணதாசனின் ‘ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்’

என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இதுபோன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன.

முதல் பாடல் :

சட்டி சுட்டதடா, ஆலயமணி படத்திற்காக கவியரசர் எழுதியது.

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா...
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா..

என்று அனுபவத்தைப் பாடலின் வாயிலாக வெளியிட்டிருப்பார். அவ்வப்போது நம்மைத் தாக்கும் மிருகத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால், நம்மிடையே இருக்கும் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டோமானால், அவை நம் மனதில் இருக்கும் மிருகத்தை அடங்க வைக்க உதவும். நன்றாகக் கவனியுங்கள்.... அடங்க வைக்கத்தான் இயலுமே ஒழிய ‘அழிக்க’ இயலாது. இதைக் கவிஞர் உணர்ந்ததால்தான் ‘அழிந்து’ என்கிற பொருளைத் தராமல் ‘அடங்கி’ என்கிற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறார்.

‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ ஆளவந்தான் படத்திற்காகக் கவிப்பேரரசு எழுதியது.

கடவுள் பாதி, மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்....
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்....
கடவுள் கொன்று கடவுள் கொன்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

கவியரசரின் கருத்தை ஒட்டியிருப்பது போலப் பாடல் துவங்கினாலும், நடைமுறையில் எல்லோராலும் அவ்வளவு எளிதில் பயில்வதற்கு ஏலாது என்கிற ரீதியில் பாட்டு அமைந்திருப்பது நோக்கத் தக்கது.

இரண்டாவது பாடல் :

‘தாய்லாந்துக் கிளிகள்’ தாய்லாந்து பெண்களைப் பற்றிக் கவியரசர்,