
ரெடி ஜூட்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.எஸ். ராகவன்
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
அந்தக்
காலத்தில் வார் வைத்த நிஜாரை அணிந்த சிறுவர்களும், சீட்டி பாவாடை சட்டை
அணிந்த சிறுமிகளும், விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் போட்ட பிள்ளையார்
சுழிதான் ரெடி ஜூட். அதைச் சொல்லிவிட்டால், களத்தில் முழு மூச்சுடன்
இறங்கிவிட்டாயிற்று என்று எதிராளிக்கு உணர்த்தி விட்டதாகிவிடும். அதன்
பின்னால் பின்வாங்க முடியாது என்பது எழுதப்படாத விளையாட்டு விதிகளின்
முக்கிய அம்சம் ஆகும். ஜூட் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் சணல் என்றும்,
ஹிந்தியில் பொய் என்றும் பொருள் இருந்தாலும், விளையாட்டுகளின் சொல்
அகராதியில் அது மாறுபட்டு விடுகிறது.
எழுத்தாளர் பற்றி :
ஜே.எஸ்.ராகவன் - 1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும்
இந்தியாவின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவரும்
இவரது வயது 72. சென்னையில் வெளிவரும் வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும்
மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 12
வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார். தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர்
வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன்,
கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 50
ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப்
பணிபுரிந்து வருகிறார். Laughing Thoughts என்கிற ஆங்கிலத் தொகுப்பு,
சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய சிவசாமியின் சபதம்
என்கிற முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள
புத்தகங்களின் எண்ணிக்கை 23.
