ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள்
Rabindranath Tagore Kadithangal
₹44+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :மஹாலக்ஷ்மி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
இந்த நூல் ரவீந்திரநாத் தாகூர்
கடிதங்கள் (சிடிபத்ர), மொழிபெயர்ப்பு த.நா.சேனாபதி மற்றும் த.நா.குமாரசாமி
ஆகியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டது.
1.சம்சாரி ரவீந்திரர்
ஸ்ரீ ஹேமலதா தேவி
கவி குரு ரவீந்திரரின் இல்லற வாழ்க்கை
எந்த வித மாக இருந்திருக்கும்? சம்ஸாரத்தில் அவர் எவ்வாறு நாட்களைக்
கழித்திருப்பார்? இவை போன்ற அவருடைய கிருஹஸ்த தர்மத்து விஷயங்களைப் பற்றிக்
கூறும்படி என்னை அநேகம் பேர் கேட்டுக் கொண்டுள்ளார்கள். அந்தப் பெரிய
(டாகுர்) குடும்பத்தில் வாழ்க்கைப்பட வந்த பழைய நாட்டுப் பெண்களில் நானும்
ஒருத்தி. அதனால் அந்த வவீட்டு விஷயங்களில் சிலவற்றை அந்தப் பழைய
விஷயங்களில் சிலவற்றை இங்கே உங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன்.
கவியின் இல்லறம் சுகமாகவே இருந்திருக்குமென்று நினைப்பவர்கள், கட்டாயம் ஏமாற்றத்தையே அடைவார்கள்.
அந்தக் காலத்தில் பெரிய இடம், பணக்காரக்
குடும்பம் என்றால், லஸ்தர் விளக்குகளும் ஜாலர் விளக்குகளும் தொங்கும்
கேளிக் கிருஹங்கள், சீமைச் சாமான்கள் அலங்காரமாக இருக்கும் 'ட்ராயிங்
ரூம்,' பெண்டாட்டி...
எழுத்தாளர் பற்றி : இரவீந்தரநாத்
தாகூர் (Rabindranath Tagore) , மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற
வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம்
நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில்
பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும்
மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின்
ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல்
இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு
பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த
விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள்
ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின்
படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும்
வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக
இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார்.
இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில்
மொழிபெயர்த்துள்ளார்.