book

கோகிலாம்பாள் கடிதங்கள்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலையடிகள்
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Add to Cart

"தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார் சின்னம்மையார்.
பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம். தனித் தமிழில் கொண்ட பற்றுக் காரணமாக, பின்னர் தனது பெயரை "மறைமலையடிகள்" என்று மாற்றிக் கொண்டார்.
அடிகளாரின் பள்ளிக் கல்வி ஒன்பதாம் வகுப்புடன் முடிவடைந்தது. எனினும் தனது 21-ம் வயதுக்குள், பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
இதற்கிடையே அடிகளாருக்கு அவருடைய 17-வது வயதில் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் சவுந்தரவல்லி, திருமணத்தின்போது அவருக்கு வயது 13.
1898 மார்ச் மாதத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக அடிகளார் பதவி ஏற்றார். 13 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். அப்போது அவரிடம் மாணவர்களாக இருந்த பலர், பிற்காலத்தில் தமிழறிஞர்களாகவும், தலைவர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் புகழ் பெற்றார்கள்.