பௌதிகம் என்கிற இயற்பியல் இரகசியங்கள்
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கனி விமலநாதன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :256
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
எளிமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படும் சுஜாதா வகை அறிவியல்
கட்டுரைகள் (உள்ளடங்கிய புத்தகங்கள்) அனைத்து வகையினரையும் ஆர்வத்துடன்
வாசிக்கவைத்துவிடும். அனைவராலும் வாசிக்க இயலும் என்பதால் தினசரிகளில்
வாராந்திரிகளில் வர்த்தகவெளியில் இவ்வகை எழுத்தே பிரபலம். ஆனால் பல
சமயங்களில் அறிவியலை அறிமுக நிலையிலும் இவ்வகை எழுத்து நீர்க்கடித்தே
அளித்துவிட்டிருக்கும். அடிப்படை கருத்தாக்கங்களையோ செயல்பாடுகளையோ
பிரதானமான அறிவியல் நிகழ்வுகளையோ விவரித்து விளக்காமல் அல்லது சுருக்கிச்
சொல்லிவிட்டு சார்ந்த தகவல்களையும் சுவாரசியமான செய்திகளையுமே முன்னிறுத்தி
நீட்டிமுழக்குவது இவ்வகை எழுத்தின் அறிகுறி அதிகுறை. நேனோ டெக்னாலஜி
பற்றிய சுஜாதாவின் சிறு புத்தகம் இவ்வகை எழுத்திற்கான சமீபத்திய உதாரணம்.