book

கலீல் கிப்ரானின் ஞானமொழிகள்

Kaleel kipranin Gnanamozhikal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பவளசங்கரி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
ISBN :9788183797559
Out of Stock
Add to Alert List

ஆன்மாவின் கருவிலிருந்து அழகு மிளிர உருவாகும் அற்புத படைப்புகளே கவிதைகள் என்பது! உள்ளமெனும் ஆழ்கடலின் ஊற்றாய் தங்கு தடையின்றி பெருக்கெடுப்பது.ஆம் உள்ளத்து உன்னத உணர்வுகளின் வெளிப்பாடு அது. ஒரு கவிஞரின் முகமூடியற்ற எண்ணவோட்டங்களின் நிறைவடிவம் அவை.நல்லதொரு கவிதை என்பது கால எல்லைகளைக் கடந்தும் ஒளிர்பவை. உயிர்களின் வாழ்வியல் இன்ப துன்பங்கள், சிக்கல்கள்,தீர்வுகள், புத்தெழுச்சிகள், பரிதவிப்புகள், பிரச்சனைகள்,நன்னெறிகள், நயமிகு சிந்தைகள், அழகியல் வண்ணங்கள், காதல் சின்னங்கள் போன்ற மானுடச் சமுதாய நலம் பாடும் உணர்வுகளை முன் நிறுத்துபவை. அதாவது கவிதைகள் என்பது கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக மிளிரக்கூடியவை. தேசம், இனம், மொழி போன்ற எதையும் கடக்கும் வல்லமை கொண்டவை. சமுதாய நலனில் அக்கறை கொண்டு, ஏமாற்றுகள், பொய் புரட்டுகள் என அனைத்தையும் வெளிச்சமிட்டுக்காட்டி விழிப்புறச் செய்பவை. கவிதைகள் மானிட மேம்பாடு என்பதை குறிக்கோளாகக் கொள்வதையே தலையாய பணியாய் கருதியிருத்தல் அவசியம். ஒரு கவிஞன் அவலம் நிறைந்த மனித வாழ்வினை முற்றும் உணர்ந்தவனாகவே இருக்கிறான்.

1883 ஆம் ஆண்டில் பிறந்த கலீல் கிப்ரான் ஒரு கவிஞன் மட்டுமல்ல, தத்துவ ஞானி மற்றும் நல்ல ஓவியனும்கூட. தன் கவிதைகளுக்குத் தானே ஓவியமும் தீட்டிவிடுவான் இக்கவி. இக்கவிஞனின் படைப்புக்கள் 20 க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த நகரங்கள் அனைத்திலும் இவன் படைப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளன. கலீல் கிப்ரானின் கவிதைகள் கால மாற்றம் எனும் சிறைக்குள் அகப்படாத கருத்துக் களஞ்சியம் என்றால் அது மிகையில்லை. எளிமையான மனித வாழ்க்கையின் வலிகளையும், இன்ப வேதனைகளையும், தம் உணர்வூறிய வார்த்தைகளின் மூலமாக கவிதைகளாக பரிணாமம் பெறச்செய்துள்ளார். மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை இவர்தம் உன்னதப் படைப்புகளான கவிதைகளும், ஓவியங்களும். கிப்ரானின் திறமை மிக்கப் புலமைக்கு அகில உலகத்தினரும் ஓர் முக்கியமான இடத்தை அளித்திருப்பதே இதற்கு சான்றாகும். மகாகவிக்குரிய தீர்க்க உள்ஞானம் வாய்க்கப்பெற்றவர் கலீல் கிப்ரான். வள்ளுவர், ஒளவையாரைப் போன்று அறவழி காட்டும் படைப்புகளை ஆக்கியதால், அவரை ஓர் ‘அறக்கவி’ என்றும் பைரன், ஷெல்லி போன்று காதல், காமம் என எழுதியதால் ‘இன்பக்கவி’ என்றும், தெய்வச் சிந்தைகளை சிறப்பாக ஊக்குவித்திருப்பதால், ‘பக்திக்கவி’ என்றும், வறுமை, தாழ்மை, கீழ்மை, பழமை, மடமை, ஏழ்மை, பெண்மை, தாய்மை என அனைத்தையும் அலசி ஆய்ந்து அறிவு புகட்டியுள்ளமையால், ‘மானுடக்கவி’ என்றே மொத்தமாக வரைவிலக்கணம் வடிக்க முடிகிறது. வாழ்தலே கவிதையாகியும், கவிதையே வாழ்வாகியும் ஓர் ‘அனுபூதிநிலை’ யை (அனுபவ ஞானம்) எட்டிய கவிஞன் இவன்.