book

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்

Pandaith Tami Nagarigamum Panpaadum

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞா. தேவநேயப் பாவாணர்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :192
பதிப்பு :12
Published on :2021
Add to Cart

நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கையாகும். எல்லா நாட்டிலும் முதன் முதல் நகர நிலையிலேயே நாகரீகமடைந்துள்ளனர் என்பதை வரலாறு எடுத்துக் கூறுகிறது. நகரப் பகுதி வாழ்நர் என்னும் சொல் நாகரிகம் உள்ளோரையே குறிக்கும் என்பது இலக்கிய வழக்கு. இந் நூலில் மிகவும் தொன்மை மிக்க பண்டைத் தமிழ் நாகரிகம் குறித்து நன்கு விளக்கப்பட்டுள்ளது.
இதுபோன்றே தமிழரது தொன்மை மிக்க பண்பாடு குறித்தும் இந்நூல் விளக்குகிறது. பண்பாடு என்பது பண்படுவது என்பதாகும். இதையே சீர்படுதல், திருந்துதல் என்று அர்த்தம் கொள்ளலாம். பண்பாடு பல பொருள்களுக்கு உரியதெனினும் அது, நிலமும் மக்கள் உள்ளமும் பற்றியே பேசப்படுவதாகும்.
சுருங்கச் சொன்னால் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் என்று கொள்ளலாம். தமிழர்களின் தொன்மை மிக்க நாகரிகம் மற்றும் பண்பாட்டைக் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள 'மொழி ஞாயிறு' ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய "பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்” என்னும் இந்நூல் பெரிதும் உதவும்.