book

குமரி கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. அப்பாதுரைப்பிள்ளை
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :12
Published on :2020
Add to Cart

தென் இந்தியாவில் குமரிக் கண்டத்தில் உள்ள புழு பூச்சி வகைகள் குமரிக் கண்டத்திலும் இருந்திருக்கிறது. மனிதனின் தோற்றம் அங்குதான் இருந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் பண்பாடுகள், வளர்ச்சி போன்றவை இங்குதான் நிகழ்ந்திருக்கின்றது. "பஃறுளியாற்று பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்கிறது சிலப்பதிகாரம்.தமிழர்களின் எண்ணங்கள் வண்ணங்களாக மலர்கின்றன. உலகத்திற்கு பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். வாழும் கலையை தெரிந்து கொண்டவன். இலக்கியத்தை வாழ்வியலோடு சேர்த்து தமிழன் பயன்படுத்தினான். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு என்று சொல்வார்கள். உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழன் பண்பாடு நிறைந்தவனாக காணப்படுவான்.குமரிக் கண்டம் இன்று இந்தியப் பெருங்கடலில் ஆழப்புதைந்து கிடக்கும் பகுதி ஆகும். 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றைய குமரிக் கண்டம் (அன்றைய இலெமூரியா கண்டத்தின்) பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மனிதன் நடந்தே சென்றிருக்கிறான். வளர்ச்சியை நோக்கி தமிழன் அன்று வறுமையை நோக்கி தமிழன் இன்று. நாகரிகத்தைச் சொல்லிக் கொடுத்த தமிழன் இன்று வெளிநாட்டு நாகரிகத்தை நோக்கி செல்கிறான். குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதி 10% கன்னியாகுமரி மாவட்டமாக மாறியுள்ளது. 90% பகுதி கடலுக்குள் அமிழ்ந்து காணப்படுகிறது. குமரி மண்ணின் வீர வரலாறு இன்று அழியும் நிலையில் உள்ளது. இன்று ஒரு பகுதி கடற்கரையில் அய்யாவின் கோயில் உள்ளது. இந்த நூல் குமரிக் கண்ட ஆய்வு நூல் ஆகும். கா. அப்பாத்துரையார் எழுதிய குமரிக்கண்டம் என்ற நூலை முதன்மை நூலாக கொண்டு எழுதப்பட்டது. இது மூலநூலின் வழி நூலாகும். மிகச் சிறந்த வரலாற்று நூல் ஆகும். குமரிக் கண்டம் இருந்ததற்கான ஆதார நூல் ஆகும். இது தமிழர்கள் கையில் இருக்கவேண்டிய நூலாகும்.