சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சில சுவையான நிகழ்வுகள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். கல்யாணிமல்லி
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2021
Add to Cartராம கிருட்டிண பரமஹம்சர், ஒருமுறை நரேந்திரனை (விவேகானந்தர்) அழைத்து, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார்.
நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார்.
உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.ஒருமுறை சுவாமி அகண்டானந்தாவுடன் இமய மலை அடிவாரத்தில் நடந்து கொண்டி ருந்தார் விவேகானந்தர். வெகு தூரம் நடந்த களைப்பு அவரை வாட்டியது. கடும் பசி வேறு! சாலையோரத்தில், இடுகாட்டுக்கு அருகில் விழுந்து விட்டார்!அந்த இடுகாட்டின் பொறுப்பாளராக இருந்தவர் சுல்பிகர் அலி. இவர், சுவாமிஜி விழுந்ததைக் கண்டு ஓடி வந்தார். தன்னிடம் இருந்த வெள்ளரிப்பழத்தை விவேகானந்த ரிடம் தந்தார்.''நீங்களே ஊட்டி விடுங் கள்'' என்றார் சுவாமி விவேகானந்தர். சுல்பிகர் அலி முதலில் தயங்கினார். பிறகு சுவாமியின் நிலை கருதி வெள்ளரிப்பழத்தை ஊட்டி விட்டார். ஓரளவு தெம்பு வந்ததும், சுவாமிஜி, ''ஊட்டி விடுங்கள் என்றதும் ஏன் தயங்கினீர்கள்?'' என்று அவரைப் பார்த்துக் கேட்டார்.''நீங்கள் ஓர் இந்து சந்நியாசி, நானோ...'' என்று இழுத்தார் சுல்பிகர் அலி. உடனே, ''அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்'' என்ற சுவாமிஜி, நன்றி கூறி விடைபெற்றார்!