book

அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி

₹550
எழுத்தாளர் :B.R. மகாதேவன், தரம்பால்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :495
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789386737861
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியை வழங்கி அறிவொளியைப் பரவலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சியே.’ காலனியாதிக்கவாதிகள் மட்டுமல்ல இந்தியர்களிலேயே பெரும் பகுதியினர் இதை உண்மை என்றே கருதி வருகின்றனர். காந்தியவாதியும் தனித்துவமான ஆய்வாளருமான தரம்பாலின் இந்நூல் இந்த மாயையை உடைத்து நொறுக்குவதோடு இந்தியாவின் பெருமிதத்துக்குரிய பாரம்பரியக் கல்வியின் வரலாற்றை ஏராளமான தரவுகளோடும் மறுக்கமுடியாத ஆதாரங்களோடும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. 18ம் நூற்றாண்டு பாரம்பரியக் கல்வி குறிப்பிட்ட சிலருக்கானதாக இல்லாமல் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் நோக்கில் இருந்தது என்பதோடு இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவுக்குச் செழுமையானதாக இருந்தது என்று வாதிடுகிறார் தரம்பால். கல்வி என்றால் என்னவென்பதை பிரிட்டனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, நம்முடைய கல்வி அமைப்பிலிருந்து பிரிட்டன்தான் நிறைய கற்றுக்கொண்டது என்கிறார் அவர்.