
எழுத்து கவிதைகள் (1959 ஜனவரி - ஏப்ரல் 1960)
Ezuththu Kavithaigal (1959 January - April 1960)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் வி. கலாவதி
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391949044
Add to Cartமுனைவர் வி. கலாவதி
எழுத்து இதழ் 1959 ஜனவரி மாதம் சி.சு. செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்டது. கலை இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி வலுவான நுணுக்கமான படைப்புகளை வெளியிடுவதற்கு ஒரு இயக்கமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் சி.சு. செல்லப்பா.
தமிழில் சிறந்த இதழ்களை உருவாக்கி அதன் மூலம் புதுவகையான இலக்கியங்களைப் படைக்க முடியும் என்ற ஒரு உந்துதல் தந்த இதழ் எழுத்து. இத்தகைய இதழில் கவிதை என்பது பரிணமிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் புதுக்கவிதை என்ற புதுவகை இலக்கியத்தை வெளி உலகிற்குக் கொண்டு வந்த ஒரு மாபெரும் பணியை சி.சு. செல்லப்பா செய்திருக்கின்றார். இனி வரும் இளைய சமுதாயம் இத்தகைய இதழ்களின் கடந்தகால போக்கை உணர வேண்டும் என்பதற்காக 1959 ஜனவரி முதல் 1960 ஏப்ரல் மாதம் வரை வெளிவந்த கவிதைகளை மட்டும் இந்த நூல் வெளிக்கொணர்கிறது. நா. பிச்சமூர்த்தி தொடங்கி மயன், தி.சோ.வேணுகோபாலன், சாலிவாஹனன், கு.பா.இராஜகோபாலன், சுந்தரராமசாமி போன்றோர் கவிதைகள் எல்லாம் தொகுத்து நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
