அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :பாரதி நிலையம்
Publisher :Bharathi Nilayam
புத்தக வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர்
ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி
விட்டது; இழி குணத்தான் மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்தது முதல்
உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப்
பேசாத நாடில்லை; எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் - எவருக்கும்
தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு
பேச்சும் மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ
அணையவில்லை . துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை
எண்ணுவோம், ஆறுதல் பெற முயற்சிப்போம்:
நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார். அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.
அவர் பிறந்தபோது நமது நாடு உலகிலே இழிவும், பழியும் தாங்கி நாடாக இருந்தது அவர் மறைந்திடுவதற்கு முன்னம் மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும், நமக்கு விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும் வீற்றிருக்கும் நிலை உண்டாகி விட்டது.
அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால், உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.