book

வீடு மனை வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும்

₹69+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சி எஸ். சண்முகம்
பதிப்பகம் :கணபதி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ganapathi Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

‘வீடு, மனை, வாகன யோகமும் கைரேகை விஞ்ஞானமும் ’ என்ற இந்த நூலினை எழுதிடும் வாய்ப்பு அளித்த  இறைவனுக்கு  முதற்கண்  நன்றி கூறி,  இந்நூலை எளிதியதற்கான நோக்கத்தையும் கூற  விரும்புகிறேன்.

 

என் மூதாதையர் வாங்கி வைத்துச் சென்ற இத்தனை ஏக்கர் நிலம்தான்  இன்றைக்கும் எங்களுக்கு இந்த ஊர்ல பணக்காரன் என்கிற அந்தஸ்தை  ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இன்றைக்கு நாங்கள் குடியிருக்கிற வீடு என் தாத்தா வாங்கித் தந்தது!, என் அப்பா வாங்கித் தந்தது! என் அம்மா பணி ஓய்வின்போது  கிடைத்த பணத்திலிருந்து வாங்கித் தந்த இடத்திலதான் வீடு கட்டி இருக்கிறேன். அவங்க மட்டும் வாங்கித் தரவில்லை என்றால் என்பாடு  திண்டாட்டம்தான்!

 

சேமித்த பணத்தை பேங்கில் போடு வச்சேன். காய்கறி, பாலுக்குக்கூட பேங்கில் இருந்து கிடைக்கிற வட்டிப்பணம் போதல.போட்ட பணம் அப்படியேதான் இருக்கிறது. இதே தொகையில ஒரு இடத்தை  வாங்கிப் போட்டிருந்தா இன்றைக்கு பல லட்சங்கள் போகும். நானும் கோடீஸ்வரன் என்று மார்தட்டி சொல்லிக் கொள்ளலாம். அந்த யோகம்  எனக்கு இல்லையே! என்று என்னிடம் அங்கலாய்ப்பவர்கள் பலர். 

 

அன்றைக்கு என்னிடம் பணம் இல்லை. GPF லோன் போட்டு இடத்தை வாங்கி, LICயிலே லோன் போட்டு வீட்டைக் காட்டினேன். இன்றைக்கு வாழ்க்கையில் சந்தோசமாக  இருக்கிறேன். அன்றைக்கு  விளையாட்டா என் பொண்ணுக்கு ஒன்று, பையனுக்கு ஒன்று என்று இரண்டு மனை வாங்கிப்  போட்டேன். அதை விற்று இன்றைக்கு என் பையனை டாக்டருக்கு படிக்க வைத்து விட்டேன்,  இஞ்சினியருக்குப் படிக்க வைத்து விட்டேன். என்  மகளை படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுத்துவிட்டேன்.' என்று மகிழ்பவர் பலர். 'அன்றைக்கு இந்த இடத்தை வாங்கச் சொல்லியதால்தான் வாங்கினேன். கடவுள் போல அன்றைக்கு  எனக்கு நீங்கள் தான் ஆலோசனை சொன்னீங்க! கஷ்டத்தோடு கஷ்டமாக வாங்கிப் போட்டேன்.  அதுதான் இன்றைக்கு என் வாழ்க்கைத்  தரத்தையே மாற்றிவிட்டது சார்.' 

 

நீங்கள் என்னதான் சம்பாதிச்சீங்க? எங்களுக்கு ஒரு மனை கூட வாங்கி வைக்கலியே,  இன்றைக்கு  வாடகை வீட்டுக்குத்  தெருத்தெருவா அலையிறோம்' என்று பெற்றோரைப் பார்த்துக் கேட்கும் பிள்ளைகள், 'எவ்வளவுதான் உழைத்தாலும்  வாழ்நாளில் எந்த சொத்துமே இல்லை. ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்று  எங்கள் வாழ்க்கை முடியாபோவுது. நல்லாதான் சம்பாதிச்சோம். அன்றைக்கு இந்த இடம் ஒரு சதுர அடிவெறும் 50 ரூபாய்தான். வாங்கிப் போட்டிருந்தால் இன்றைக்கு எத்தனை கோடியோ! ஆனால்  சம்பாதித்தோம், தாராளமா செலவு செய்தோம், அவ்வளவுதான் என்று ஏங்குவோரும் இருக்கிறார்கள்.  

 

இப்படி நமது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும், அங்கலாய்ப்பான வாழ்க்கைக்கும் காரணம் என்ன?  சரியான காலத்தினைக்கண்டறிந்து, திட்டமிட்டு ஒரு காரியத்தை செய்வதைச் சார்ந்தே நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.  அப்படிப்பட்ட சரியான காலத்தினைக் கண்டறிந்து திட்டமிட்டு காரியத்தைச் செய்ய கைரேகைக்கலை உதவி செய்கிறது. ஜாதகத்தின்முலம், கைரேகை மூலம், நமது எதிர்காலத்தினை அறிவதால் மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் அந்த  செயலை செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம்.

 

சாதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வயதில் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது என்பதை  கைரேகை மூலமாக  அறிந்து கொண்டால் அதனை வாங்குவதற்கு தேவையான பணத்தை அதுவரை பாதுகாப்பாக வங்கியில் சேர்த்து  வைக்கலாம். நம் கனவு இல்லத்தினை சாஸ்திரப்படி எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை முன்கூட்டியே  திட்டமிட்டு சிறிது சிறிதாக நமது சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.